உடலில் கால்களும் கைகளும் எவ்வளவு முக்கியமானதோ, அதே அளவு முக்கியமானவை அவற்றுடன் தொடர்புடைய நகங்களும். நம்முடைய கைகள் மற்றும் கால்களுடன் இணைந்திருக்கின்ற முக்கியமான பகுதிகளான கை மற்றும் கால் விரல் நகங்களை முறையாக பராமரிப்பதும் முக்கியமானதாகும். சுத்தமான மற்றும் ஆரோக்கியமான நகங்கள் கை மற்றும் கால்களை அழகாக தோற்றமளிக்கச் செய்வதுடன், பல்வேறு வகையான கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களின் தாக்குதல்களிலிருந்தும் பாதுகாக்கவும் செய்கிறது.
நகங்களுக்கு வேண்டிய சத்துக்கள்:
இரும்புச்சத்துள்ள உணவுகள்: உடலில் இரும்புச்சத்து பற்றாக்குறை இருந்தால், நகங்கள் எளிதில் உடைந்துவிடும். எனவே நகங்களை நன்றாக பராமரிக்க வேண்டுமென்றால், இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். அதிலும் இறைச்சி, மீன் வகைகள், சோயா வகைகள், பீன்ஸ், அவரைக்காய் மற்றும் அவரை விதைகள், முழு தானிய பொருட்கள், பச்சை கீரை வகைகள், காய்கறிகள், கிழங்கு வகைகள், நட்ஸ், முட்டை, கோழி மற்றும் வான்கோழி பேரிச்சை போன்றவற்றை சாப்பிட வேண்டும்.
வைட்டமின் டி உணவுகள்: நகங்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வைட்டமின் டி ஆகியவை பெரிதும் உதவியாக இருக்கும். இத்தகைய சத்து பீட்ரூட்டில் அதிகம் உள்ளது. எனவே தினமும் பீட்ரூட்டினை உணவில் சேர்த்துக் கொள்வதால், நகங்கள் ஆச்சிரியப்படும் வகையில் ஆரோக்கியமான வளர்ச்சியையும், வலிமையையும் பெற்றுவிடும்.
கால்சியம் உணவுகள்: பால் பொருட்களில் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே இவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது, நகங்கள் தினந்தோறும் நல்ல பராமரிப்பை பெறுவதாக உறுதி செய்திட முடியும்.
குறிப்புகள்:
* ஒரு மேசைக்கரண்டி அளவு எலுமிச்சை சாற்றினை, ஒரு கோப்பை சாதாரண தண்ணீருடன் கலந்து விடுங்கள். பிறகு, அந்த கலவையில், கை மற்றும் கால் விரல் நகங்களை சில நிமிடங்களுக்கு ஊற வைக்க வேண்டும். அதன்பின் நகங்களை சூடான தண்ணீரில் சுத்தம் செய்து விட்டு, அதன் மீது மாய்ச்சுரைசரை தடவி விடவும். இந்த வழிமுறை நகங்களிலுள்ள கறைகளை நீக்கவும் மற்றும் நகங்களை பாதுகாக்கவும் உதவும்.
* ஒரு காட்டன் துணியை எலுமிச்சை சாற்றில் நனைத்து பிழிந்து எடுத்து, நகம் முழுவதும் சிறிது நேரத்திற்கு மசாஜ் செய்து விட வேண்டும். இதனால் கை மற்றும் கால் நகங்கள் உறுதியானதாகவும் மற்றும் பிரகாசமானதாகவும் மாறிவிடும்.
* ஆலிவ் ஆயில் நக பராமரிப்பு உட்பட பல்வேறு அழகு குறிப்புகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கை மற்றும் கால் நகங்களை பிரமிக்கத்தக்க வகையில் பளபளப்பாகவும் மற்றும் உறுதியாகவும் மாற்ற விரும்பினால், நகங்களுக்கு தினமும் கொஞ்சம் ஆலிவ் எண்ணையை தடவி விட வேண்டும்.
* நகங்களின் பராமரிப்பிற்கு, வெதுவெதுப்பான கடுகு எண்ணையில் நகங்களை ஒவ்வொரு நாளும், 8 முதல் 10 நிமிடங்களுக்கு ஊற வைக்க வேண்டும். பிறகு அந்த நகங்களை மெதுவாகவும் மற்றும் மென்மையாகவும் இரத்த ஓட்டம் சீராகும் வகையில் மசாஜ் செய்து விடவும். இந்த செயல்களை தினமும் செய்து வந்தால் நகங்கள் உறுதியாகவும் மற்றும் அழகாகவும் இருக்கும்.
* உண்மையான நகப் பாதுகாப்பிற்கு, கால் விரல் நகங்களை வளைவாக வெட்டாமல் நேர்கோட்டில் வெட்டுங்கள். பொருத்தமில்லாத வகையில் நகங்களை வெட்டுதல், சரியாக பொருந்தாத காலணிகள், கால் விரல் நகங்களில் விரிசல்கள் மற்றும் வெடிப்புகளை ஏற்படுத்திவிடும்.