Author Topic: ~ ஸ்ட்ராபெரி பழம் உடல்நல நன்மைகள்:- ~  (Read 808 times)

Offline MysteRy

ஸ்ட்ராபெரி பழம் உடல்நல நன்மைகள்:-




தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியம் இருக்காது எனக் கூறுவது உண்டு. ஏனெனில் ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்.ஆனால் இந்த விஷயத்தில் ஸ்ட்ராபெரி பழம் ஆப்பிளையே மிஞ்சும் என்பது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் சால்க் இன்ஸ்டிடியூட்டின் செல்லுலர் நியூராலஜி ஆய்வகம்(சிஎப்எல்) எலிகளை வைத்து ஒரு ஆய்வை மேற்கொண்டது. ஒரு பிரிவு எலிகளுக்கு ஸ்ட்ராபெரி பழம் வழங்கப்பட்டது.

மற்றொரு பிரிவுக்கு வழங்கப்படவில்லை. ஒரு குறிப்பிட்ட நாட்கள் கழித்து அவைகளுக்கு உள்ள நோய் எதிர்ப்பு சக்தி பற்றி ஆய்வு பரிசோதிக்கப்பட்டது. இதில் ஸ்ட்ராபெரி பழம் சாப்பிட்ட எலிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி, சாப்பிடாத எலிகளைவிட அதிகமாக இருந்தது தெரியவந்தது.

ஸ்ட்ராபெரி பழத்தில் உள்ள பிலேவனாய்டு என்ற பொருள், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துக்கு இணையாக செயல்படுவது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பழம் உதவும். இந்த பொருள் வேறு சில பழங்கள், காய்கறிகள், டீ மற்றும் ரெட் ஒயின் ஆகியவற்றில் உள்ளன.

இது சர்க்கரை நோய், புற்று நோயை தடுக்கும் திறன் வாய்ந்தது. இதுதவிர எல்லாவிதமான நோய்களையும் தடுக்கும். தாவரங்களில் இலைகள் மற்றும் பழங்களை பூச்சிகள் தாக்குவதைத் தடுக்கவும் பிளேவனாய்டு உதவுகிறது என்று சிஎப்எல் விஞ்ஞானியும், இந்த ஆய்வின் தலைவருமான பம் மஹர் தெரிவித்தார்.