Author Topic: ~ வெற்றிலை பாக்கு போடுபவரா நீங்கள் ? ~  (Read 644 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226378
  • Total likes: 28827
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வெற்றிலை பாக்கு போடுபவரா நீங்கள் ?




ஜீரண சக்திக்கு வெற்றிலை ரொம்ப நல்லது. அதுதவிர நாம் சாப்பிடும் சாப்பாட்டினால் ஏதும் ஒவ்வாமை வந்தால் அதனை வெற்றிலை நீக்கும்.

வெற்றிலையோ அல்லது பாக்கோ எதுவானாலும் அதை மட்டும் தனியாக வாயில் போட்டு மெல்லக்கூடாது. வெற்றிலையை மட்டும் வாயில் போட்டு அப்படியே மென்றால் நாக்கின் நுண்ணிய நரம்புகளும், ரத்த ஓட்டமும் பாதிப்படையும். சரியாக பேச வராது. பாக்கை மட்டும் தனியே மென்றால் நெஞ்சுவலி வரும். சில சமயம் மாரடைப்பு ஏற்படலாம். தவிர ஈரல் பாதிப்புடன் சோகை வியாதியும் வரலாம்.

வெற்றிலையை இரண்டு மூன்றாக சேர்த்து வைத்துப் போடக்கூடாது. வெற்றிலையின் பின்புறத்தில் சின்னச்சின்ன பூச்சி, புழுக்கள் இருக்கலாம். வெற்றிலையை மொத்தமாக சேர்த்து மெல்லும்போது அந்த புழு, பூச்சிகளும் வயிற்றுக்குள்போகும். சிலபேரை இது உடனடியாக மயக்கத்தில்கூட தள்ளிவிடும். நடுநரம்பை ஒட்டித்தான் பூச்சிகள் இருக்கும். வெற்றிலையை கிழித்துப் போடுவது அதற்காகத்தான். அதனால் வெற்றிலையை ஒவ்வொன்றாக எடுத்து முன்னேயும் பின்னேயும் துடைத்து சுண்ணாம்பு தடவி நடு நரம்பைக் கிள்ளிப்போட்டுவிட்டு பாக்கோடு சேர்த்துப் போட்டுக்கொள்ள வேண்டும்.வெற்றிலை

வெற்றிலை பாக்கு தொடர்பான வரலாறு பற்றி நாம் இங்கே பார்க்கலாம்

பாக்குப் போடுவது ஆண்-பெண் உறவில் இன்பத்தை மிகுவிக்கும் ஒன்றாக மிக நீண்ட காலமாகக் கருதப்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் உணவு உண்டபின் கணவனுக்கு, மனைவி வெற்றிலை மடித்துக் கொடுக்கும் பழக்கம் இன்றும் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்தப் பழக்கம் தமிழர்களிடையே பழங்காலத்திலிருந்தே இருந்துள்ளது.“வெற்றிலை இந்தியாவின் பூர்வீக பயிர்வகை கிடையாது.

இறக்குமதி செய்யப்பட்ட ஒன்று. இது மலேயா நாட்டிலிருந்து தமிழகம் வந்திருக்கலாம்’ “வெற்றிலை, பாக்குப் போடும் பழக்கம் தமிழர்களிடையே சங்க காலத்துக்குப் பின் தோன்றியதாக இருக்கலாம்’ என்று வரலாற்றுப் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் கூறியுள்ளார் (தென்னிந்திய வரலாறு, பக்.213). ஆனால், சங்க இலக்கியங்களில் வெற்றிலை, பாக்குப் போடுவது பற்றிய குறிப்புகள் நிறையக் காணப்படுகின்றன.தமிழர் பண்பாட்டில் அகத்துறையில் வெற்றிலை, பாக்குப் பெற்றுள்ள இடம் பழங்காலத்திலிருந்து இன்று வரை தொடர்கிறது…