பொடி ஜவ்வரிசி - அரை கப்
சர்க்கரை - கால் கப்
ரோஸ் எஸன்ஸ் - அரை தேக்கரண்டி (அ) பந்தன் எக்ஸ்ட்ராக்ட் - சிறிது
கலர் - சில துளிகள்
வெண்ணெய் - சிறிது
தேங்காய் துருவல் - அரை கப்
ஜவ்வரிசியை ஒரு மணி நேரம் நீரில் ஊற விடவும்.
பின் நீரை முழுவதும் வடித்து விட்டு கலர் மற்றும் எஸன்ஸ் சேர்த்து வைக்கவும்.
சர்க்கரையுடன் கால் கப்பிற்கு சற்று கூடுதலாக நீர் விட்டு கொதிக்க விடவும். பந்தன் இலை சேர்ப்பதாக இருந்தால் இந்த நிலையில் பந்தன் இலையை போட்டு கொதிக்க விடலாம்.
சர்க்கரை கரைந்து சற்று கொதித்ததும் ஜவ்வரிசியில் ஊற்றி கலக்கவும்.
ஸ்டீம் செய்ய போகும் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி விட்டு கலவையை ஊற்றி பரப்பி விடவும். குக்கரில் நீர் விட்டு அதில் கலவை உள்ள பாத்திரத்தை வைக்கவும். நீர் போகாமல் இருக்க சிறு சிறு ஓட்டைகளிட்ட அலுமினியம் ஃபாயில் கொண்டு மூடலாம்.
விசில் இல்லாமல் குக்கரை மூடி அதிக தீயில் 15 - 20 நிமிடம் வேக வைக்கவும். உள்ளே விட்ட கத்தி சுத்தமாக வெளியே வந்ததும் எடுத்து ஆற விடவும்.
தேங்காய் துருவலில் பிரட்டி எடுத்து பரிமாறவும்.
சுவையான சாகோ புட்டிங் தயார்.
note:
நீர் அதிகம் இருந்தால் செட் ஆக தாமதமாகும். அதனால் கால் கப்பிற்கு மேல் அரை கப்பிற்கு குறைவாக இருந்தால் போதும். நன்றாக ஆறும் வரை எடுக்க வராது. இது தனி தனி மோல்டில் ஊற்றினாலும் சரி, ஒரே தட்டில் ஊற்றி வேக வைத்து துண்டுகளாக்கினாலும் சரி. இதில் தேங்காய் துருவல் ஃப்ரெஷாக பயன்படுத்தி இருக்கிறேன், விரும்பினால் அதையும் ஆவியில் வேக வைத்து பயன்படுத்தலாம். இந்த பொடி ஜவ்வரிசி சுலபமாக ஆவியில் வேகக்கூடியது. பந்தன் அல்லது ரம்பை இலை எஸன்ஸ் சேர்த்தாலும், ஃப்ரெஷ் இலையை சர்க்கரையில் சேர்த்து கொதிக்க வைத்தால் நல்ல வாசம் தரும். இதில் லேயர்களாக பல வண்ணங்கள் கொண்டும் செய்யலாம். ஒரு கலர் ஊற்றி 5 நிமிடம் வேக விட்டு பின் அடுத்த கலர் கலவை ஊற்றி வேக விடலாம். இது போல் வேரியேஷன்ஸ் குட்டீஸ் பார்ட்டிக்கு ஏற்றதாக இருக்கும்.