பாசிப்பருப்பு - கால் கப்
தேங்காய் துருவல் - கால் கப்
சர்க்கரை - கால் கப்
ஏலக்காய் பொடி - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
இடியாப்ப மாவு - ஒரு கப்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
பாசிப்பருப்பை சிவக்க வறுத்து முக்கால் பதத்திற்கு வேக வைக்கவும்.
வேக வைத்த பாசிப்பருப்பில் தேங்காய் துருவல், சீனி, ஏலக்காய் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து சுருள கிளறவும்.
இடியாப்ப மாவில் உப்பு சேர்த்து தண்ணீரை கொதிக்கவைத்து சிறிது சிறிதாக விட்டு கெட்டியாக பிசையவும்.
வாழை இலையில் எண்ணெய் தடவி பிசைந்த மாவில் இடியாப்பம் பிழிந்து நடுவில் பாசிப்பருப்பு கலவையை வைக்கவும்.
இட்லி பானையில் தண்ணீர் வைத்து இலையை பாதியாக மடித்து மூடி வேக வைக்கவும்.
சுவையான லவேரியா தயார்