Author Topic: உளுந்து முறுக்கு  (Read 720 times)

Offline kanmani

உளுந்து முறுக்கு
« on: March 01, 2013, 11:48:13 AM »

    உளுந்து - ஒரு கப்
    அரிசி மாவு - 2 1/2 கப்
    வெண்ணெய் - ஒன்றரை மேசைக்கரண்டி
    எள் - ஒரு தேக்கரண்டி
    சீரகம் - அரை தேக்கரண்டி
    ஓமம் - அரை தேக்கரண்டி
    உப்பு - தேவைக்கு
    எண்ணெய் - பொரிக்க

 

 
   

உளுந்தை கழுவி ஒன்றிற்கு மூன்று கப் தண்ணீர் விட்டு குக்கரில் 3 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்து, ஆற விட்டு மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்.
   

அரைத்த உளுந்து மாவுடன், அரிசி மாவு, வெண்ணெய், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
   

பிறகு எள், சீரகம், ஓமம் சேர்த்து மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை. உளுந்தின் ஈரப்பதமே போதுமானது.
   

பிசைந்த மாவை முறுக்கு அச்சில் போட்டு பிழியவும்.
   

பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிழிந்த முறுக்கை போட்டு பொரித்தெடுக்கவும்.
   

சுவையான உளுந்து முறுக்கு தயார்.