Author Topic: வெறுக்க கண்டேன்...  (Read 1627 times)

Offline JS

வெறுக்க கண்டேன்...
« on: October 07, 2011, 03:40:03 PM »
நெருங்கி வரும் வானம்
நீரோடையாய் என் மின்னல்
கரை புரண்டு ஓடும் வேதனைகள்
எதை தாங்குவேன் நான்..
எங்கு ஓடுவேன் நான்
அலையாய் என் சோகங்கள்
பெருக்கெடுக்க
யார் வந்தால் என் வாழ்வில்
மேகங்கள் திரளும்
மழை பொழிய...
சலனமில்லாமல் ஓடும்
நீரோடை கூட தான் சேரும்
இடம் அறியும்
மனிதனாய் பிறந்து
என்ன சுகம் கண்டேன்
அடுத்தவர் என்னை வெறுக்க
கண்டேன் ஏளனமாய்...
JS
நம்பிக்கையே வாழ்வின் அடிப்படை

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 601
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: வெறுக்க கண்டேன்...
« Reply #1 on: October 08, 2011, 01:39:49 AM »
Quote
அலையாய் என் சோகங்கள்
பெருக்கெடுக்க
யார் வந்தால் என் வாழ்வில்
மேகங்கள் திரளும்
மழை பொழிய...

nalla kavithai jsma ;)