மரணமே வந்தாலும்
உன்னை மறக்காத
இதயம் வேண்டும்...
ஜென்மம் ஒன்று இருந்தால்
அதில் நீயே வேண்டும்
உறவாக...! மட்டும் அல்ல
உயிராக...!
இதயத்தில்
அன்பு இருந்தால்
உன்னை மறந்து விடலாம்...!
உன் அன்பு தான்
என் இதயம் என்றால்
எப்படி உன்னை மறக்க முடியும்?
கண்ணோடு கலந்திருந்தால்
கண்ணீரோடு விட்டிருப்பேன்...!
என் உயிரோடு நீ கலந்ததால்
உன்னை பிரிவது எப்படி?
யாருக்காக சிரித்தாயோ
அவர்களை நீ மறந்து விடலாம்...
ஆனால், யாருக்காக அழுதாயோ
அவர்களை ஒரு நாளும்
உன்னால் மறக்க முடியாது!