Author Topic: ஓ மனிதனே!!!  (Read 1254 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 118
  • Total likes: 118
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
ஓ மனிதனே!!!
« on: October 05, 2011, 08:22:44 PM »
ஓ மனிதனே!!!
பிறப்பு ஒருமுறை தான்
அடுத்த பிறவி பற்றி
எண்ணாதே..
இப்பிறவியில் புவி அளவு
புகழ் வேண்டாம்
உன் சுற்றத்தினரிடமாவது
நற் பெயர் வாங்கு..

உதவி செய்து பார்
ஆனந்தம் என்பதின்
பொருள் அறிவாய் அன்று..

உனக்கு தெரிந்ததை
பிறருக்கு சொல்ல தயங்காதே
சுயமாய் சிந்திந்து பழகு
பொறுமை காத்திடு
போட்டி, பொறாமை விட்டொழி..
புகழ் தானாய் வந்து சேரும்..

புத்தகம் பயில்வதை
மறந்து விடாதே..
முழுதாய் அறிந்தவன் எவரும்
இல்லை..
பிறரை பார்த்து வாழ எண்ணாதே
உனக்கு விதிக்கப்பட்டது தான்
நிலைக்கும், கிடைக்கும்..

எதிரிகளையும் நேசி
உன் நட்புக்கூட்டம்
உன்னை ஆக்கும் கூட்டமாக
இருக்கட்டுமே
அழிவுக்கு வேண்டாம்..

தோல்விகள் இல்லா
வாழ்க்கை இல்லை
காதல் தோல்வி மட்டுமே
தோல்வியும் இல்லை

வாழ்க்கை வாழ்வதற்கே
தற்கொலை செய்யும்
கோழையாய் மாற
எண்ணாதே!!!!


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

Re: ஓ மனிதனே!!!
« Reply #1 on: October 06, 2011, 02:54:04 PM »
Quote
தோல்விகள் இல்லா
வாழ்க்கை இல்லை
காதல் தோல்வி மட்டுமே
தோல்வியும் இல்லை

kaathalarkal thoottru pogalam  kaathal thoorpathillai ;)