Author Topic: மஷ்ரூம் ஆலூ சுக்கா  (Read 779 times)

Offline kanmani

மஷ்ரூம் ஆலூ சுக்கா
« on: February 21, 2013, 01:50:40 PM »
     மஷ்ரூம் - 500 கிராம்
    2. உருளை - 4
    3. வெங்காயம் - 2
    4. சாம்பார் பொடி / மிளகாய் தனியா கலவை - 2 தேக்கரண்டி
    5. கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி
    6. மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி [காரத்துக்கு ஏற்ப]
    7. மஞ்சள் தூள் - சிறிது
    8. சீரக தூள் - 1/4 தேக்கரண்டி
    9. பச்சை மிளகாய் - 2
    10. சர்க்கரை - 1 தேக்கரண்டி
    11. உப்பு
    12. கறிவேப்பிலை
    13. எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி

 

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி நறுக்கி வைக்கவும்.
    வெங்காயம், மஷ்ரூம், பச்சை மிளகாய் நறுக்கி வைக்கவும்.
    பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம் பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
    பாதி வதங்கியதும் சர்க்கரை மற்றும் தூள் வகை எல்லாம் (மிளகு தவிற) சேர்த்து பிரட்டவும்.
    பின் நறுக்கிய உருளை மற்றும் மஷ்ரூம் கலந்து பிரட்டி மூடி விடவும்.
    மஷ்ரூம் வெந்ததும் மிளகு சேர்த்து பிரட்டி விடவும்.
    மசாலா நன்றாக பச்சை வாசம் போய் மஷ்ரூம் உருளையுடன் கலந்ததும் எடுக்கவும்.
    சுவையான மஷ்ரூம் உருளை சுக்கா தயார்.

Note:

மிளகு தூள் மஷ்ரூம் கலந்த உடனேவும் சேர்க்கலாம். மஷ்ரூம் நீர் விடும் என்பதால் இதில் நீர் சேர்க்க தேவை இல்லை. மஷ்ரூமை அதிக நேரம் வதக்க கூடாது.