வேக வைத்து நறுக்கிய உருளைக்கிழங்கு - ஒரு கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப்
தக்காளி விழுது - அரை கப்
சீரகம் - அரை தேக்கரண்டி
மிளகாய் பொடி - ஒரு தேக்கரண்டி
மல்லிப் பொடி - அரை தேக்கரண்டி
சீரகப் பொடி - அரை தேக்கரண்டி
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
கரம் மசாலா பொடி - அரை தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு ஏற்ப
கறிவேப்பிலை - சிறிது
மல்லித் தழை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.
வேக வைத்து நறுக்கிய உருளைக்கிழங்கை எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சீரகம் போட்டு அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, பொடி வகைகள், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பிறகு தக்காளி விழுது, உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
எண்ணெய் பிரிந்து மேலே வந்ததும் உருளைக்கிழங்கைப் போட்டு கிளறவும்.
சிறிது தண்ணீர் தெளித்து கொதிக்க விடவும். 2 நிமிடம் உருளைக்கிழங்கை வேக விடவும்.
பிறகு மல்லித் தழை சேர்த்து இறக்கி பரிமாறவும். சுவையான காஷ்மீரி ஆலூ தயார்.