Author Topic: சைனீஸ் ரெசிபி: தக்காளி முட்டை சாதம்  (Read 691 times)

Offline kanmani

பொதுவாக சைனீஸ் உணவுகள் அனைவரையும் கவரும் ஒரு உணவு வகைகளுள் ஒன்று. அதிலும் முக்கியமானது நூடுல்ஸ், மேகி, ஃப்ரைடு ரைஸ் போன்றவை. மேலும் குழந்தைகளுக்கு சைனீஸ் உணவுகளின் சுவை மிகவும் பிடிக்கும். அனைத்து குழந்தைகளும் இந்த வகையான உணவுகளை விரும்பி சாப்பிடுவர்.

அத்தகையவற்றில், காலையில் பள்ளிக்கு செல்லும் போதும் குழந்தைகளுக்கு சுவையான வகையில் ஒரு கலவை சாதத்தை செய்து கொடுக்க நினைத்தால், அப்போது சைனீஸ் உணவுகளில் ஒன்றான தக்காளி முட்டை சாதத்தை செய்து கொடுக்கலாம். இது மிகவும் எளிமையான முறையில் செய்யக்கூடியது. சரி, அதன் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

 பாசுமதி அரிசி - 3 கப் (வேக வைத்தது)
தக்காளி - 2 (நறுக்கியது)
தக்காளி கெட்சப் - 4 டேபிள் ஸ்பூன்
வெங்காயத்தாள் - 4 (நறுக்கியது)
முட்டை - 4 (வேக வைத்து, துண்டுகளாக்கப்பட்டது)
பூண்டு - 2 டீஸ்பூன் (நறுக்கியது)
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
சோயா சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
வினிகர் - 4 டேபிள் ஸ்பூன்
 கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

 செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

 பின்னர் வெங்காயத்தாள், தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அடுத்து வேக வைத்த சாதம், உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.

 பிறகு சிறிது நேரம் கழித்து, அதில் தக்காளி கெட்சப், உப்பு, சோயா சாஸ் மற்றும் மிளகு தூள் போட்டு, கிளறி விட வேண்டும். பின் முட்டைத் துண்டுகளை சேர்த்து பிரட்ட வேண்டும்.

அதே சமயம், சோள மாவை சிறிது நீர் மற்றும் வினிகரில் கலந்து கொண்டு, அதனையும் வாணலியில் சேர்க்க வேண்டும். பின் அந்த சாதத்தை நன்கு 5 நிமிடம் கிளறி, இறக்க வேண்டும்.

இப்போது சுவையான தக்காளி முட்டை சாதம் ரெடி!!!