Author Topic: காலிஃப்ளவர் பஜ்ஜி  (Read 604 times)

Offline kanmani

காலிஃப்ளவர் பஜ்ஜி
« on: February 21, 2013, 09:13:24 AM »
பச்சை இலைக் காய்கறிகளுள் காலிஃப்ளவர் உடலுக்கு மிகவும் சிறந்தது. அத்தகைய காலிஃப்ளவரை இதுவரை மஞ்சூரியன் செய்து தான் சாப்பிட்டிருப்போம். ஆனால் இப்போது அதனை பஜ்ஜி போன்று மாலை வேளையில் டீ, காபி குடிக்கும் போது செய்து சாப்பிட்டால், சூப்பராக இருக்கும். சரி, இப்போது அத்தகைய காலிஃப்ளவரை வைத்து ஈஸியான முறையில் எப்படி பஜ்ஜி செய்வதென்று பார்ப்போமா!!!

 தேவையான பொருட்கள்:

காலிஃப்ளவர் - 2 கப்
கடலை மாவு - 1 கப்
 மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
 பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
ஒமம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

 முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மிளகாய் தூள், பெருங்காயத் தூள், ஓமம், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

 பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, சூடேற்ற வேண்டும். பிறகு வாணலியில் உள்ள எண்ணெயானது காய்ந்ததும், அதில் நறுக்கிய காலிஃப்ளவரை மாவில் நன்கு நனைத்து போட வேண்டும்.

 பின்பு காலிஃப்ளவரானது நன்கு பொன்னிறமாக வெந்ததும், அதனை எடுத்து, தட்டில் வைக்க வேண்டும்.

 இதேப் போன்று அனைத்து காலிஃப்ளவரை பொரித்து எடுக்க வேண்டும்.

இப்போது சுவையான காலிஃப்ளவர் பஜ்ஜி ரெடி!!!