Author Topic: ~ பரங்கிக்காய் சூப் || pumpkin soup ~  (Read 821 times)

Offline MysteRy

பரங்கிக்காய் சூப் || pumpkin soup



தேவையான பொருள்கள். . .

பரங்கிக்காய் = 1 துண்டு
தக்காளி = 1
வெங்காயம் = 1
பூண்டு = 3 பல்
மிளகுத்தூள் = 1 ஸ்பூன்
பால் = அரை கப்
எண்ணெய் = 3 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
கொத்தமல்லி = சிறிதளவு

செய்முறை. . .

பரங்கிக்காயை தோலை சீவி சிறு துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம் மற்றும் பூண்டை சிறியதாக நறுக்கி கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு பூண்டு, வெங்காயம் போட்டு வதக்கவும். பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி மற்றும் பரங்கிக்காயை சேர்த்து போட்டு வதக்கவும்.

நன்றாக வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து மூடி வைத்து வேக வைக்கவும். நன்கு வெந்ததும் இறக்கி ஆற வைத்து அரைத்து கொள்ள‌வும்.

பிறகு அரைத்ததை வேறு பாத்திரத்தில் போட்டு பால் ஊற்றி கொதிக்க வைத்து மிளகுத்தூள் மற்றும் கொத்தமல்லி தூவி சூடாக பரிமாறவும்.
சூடான ஆரோக்கியமான “பரங்கிக்காய் சூப்” தயார்.

மருத்துவ குணங்கள். . .

பரங்கிக்காயில் கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் “ஈ”, வைட்டமின் “பி” மற்றும் இரும்பு, துத்தநாகம், மெக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம், பொட்டாசியம், நியாஸின், ஃபோலிக் அமிலம், கொழுப்பற்ற அமினோ அமிலங்கள் அதிகமாக உள்ளன.

பரங்கிக்காய் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்தது. நீர்ப்பை கோளாறுகள், வயிற்று கோளாறுகள், குடல் புழுக்கள், சிறுநீர் கோளாறுகள், வாத நோய், தீக்காயங்கள் மற்றும் சிறுநீரக வீக்கம், சிறுநீர் எரிச்சல் ஆகிய கோளாறுகளை குறைக்கும். இவை உடலுக்கு ஊட்டம் மற்றும் சக்தியை அளிக்கிறது.

உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு நோயற்ற வாழ்வு வாழ்வோம்.