காதல்!!!
அழகான பூக்கள் பூத்துக் குலுங்கும்
புதுமலர், உலக அதிசயங்களும்
அடிபணியும், விதிவிலக்கல்ல
விண்ணில் இருப்பவர்களுக்கும்
மண்ணில் உதிப்பவர்களுக்கும்,
எனக்கும்தான் உன் வருகையால்,
உனக்கும்தான் என் வருகையால் ,
யாரென்று தெரியாத புதுமுகம் ,
பார்த்ததும் பட்டாம்பூச்சியாய்
பறந்தது என் அகம், பட்டென
பச்சைக்கொடி, உடலெங்கும் சிலிர்த்து
மைர் மலைத்து நிற்க்க,
மெல்லமாய் முகம் காட்டியது,
கண்டாலே போதும் கண்கள்
கதகளி ஆட, இதயத்திலே
சலங்கை ஒலி இதமாய்ஒலிக்க,
கால் வழி இறங்கி வரைந்த ஓவியம்
அர்ப்பணம் செய்தது உன்னை என்
மீது கொண்ட காதலுக்கு,
பேசக்கேட்டதை உணர்ந்தோம்,
சாப்பிடத் தோன்றாது உணவாய்
உணர்வுகள் செல்லும், தூக்கம்
தொலைத்து கணவாய் வந்து
சொல்லும், கோடியில் ஒருத்(தன்)தி
போலென்று, தொலைந்த உ(எ)ன்
இதயம், தொலையாத உ(எ)ன்
உடல், இணை சுற்றும் உ(எ)ன்
ஆன்மா, கல்நெஞ்சமும் கரைந்துவிடும்
காதலால் கவிதைகளாய் கைவழி
இறங்குமென்று, மாயங்களின்
வரிசையில் மாயையாய் நிலவும்
ஏளனமாய் தோன்றும், தென்றலும்
இன்னிசை பாடும், மொட்டை மாடியும்
பொலிவுபெறும், முகக்கண்ணடியும்
அதிசயமாய் மாறுமென்று,
பழகிய நினைவுகளை அசைபோட்டு
உறுதி எடுத்தோம் காதலர் தினத்தில்,
"உனைபிரியாத வரம் வேண்டும்
உயிர் உடல் பிரிந்தாலும்,
உடல் சுமந்த இதயத்தில் இடம் வேண்டும்
உடல் இணை நிழல் பிரிந்தாலுமென்று"
உறுதியின்படி உளமார உள்ளேன்
நீ சிகப்பு சேலையை கட்டிய பிறகும்
இந்நாள்வரை,
ஆனால் நீ...........
உணர்வாய் ஒருநாள்....!!!