காதல் வலியாய் உணர்கையில்
காதல் வலிதான்.
காதலின் வலியிலும் சுகம் தேடுவதே காதல்..!!
காதலுக்காய் காத்திருக்கையில்
காதலியின் ஒவ்வொரு வார்த்தையும்
கவிதையாய் உள்வாங்கிய
கவிதை கள்வனே அவளின் இதயத்தை
களவாடி கடிவாளமிடாமல் அவளின்
காதலால் காயம் என்கிறாய்,
காத்திருப்பு கசப்பு என்கிறாய்....
கன்னி ஒருவளை
கண்டதும் மையல் கொண்ட
கந்தர்வனே இபொழுது உனக்குள் வினவு
காதல் வலியா.....?, சுகமா.....?