பெரும்பாலான பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது, காஃப்பைன் உள்ள உணவுப் பொருட்களை தவிர்ப்பார்கள். ஏனெனில் அவர்கள் அதை குடிப்பது ஆரோக்கியமற்றது என்று நினைப்பதால் தான். மேலும் வீட்டில் இருக்கும் பெரியோர்களும், அவர்களை குடிக்க வேண்டாம் என்று சொல்வார்கள். ஆனால் ஒரு சில மூலிகை டீ-க்கள், உடலுக்கு மிகவும் சிறந்தது. முக்கியமாக அதை குறைந்த அளவில் குடித்தால், அவை நிச்சயம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும். அதையே அளவுக்கு அதிகமாக பருகினால், அது கர்ப்பிணிகளுக்கு தீங்கை விளைவிக்கும். அதே சமயம் அனைத்து மூலிகை டீ-க்களும் உடலுக்கு ஆரோக்கியமானது அல்ல.
அதுமட்டுமின்றி, சிலருக்கு மூலிகை டீ-க்களைப் பற்றி சரியான நன்மைகளைப் பற்றி தெரியவில்லை. உதாரணமாக, நிறைய கர்ப்பிணிகள், க்ரீன் டீ குடித்தால், குழந்தையின் வளர்ச்சிக்கு ஆரோக்கியமற்றதாக இருக்கும் என்றும், சிலர் அதனை குறைந்த அளவில் குடித்தால், எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாது என்றும் நினைக்கின்றனர். எனவே எந்த மூலிகை டீ குடிப்பதாக இருந்தாலும், அந்த மூலிகை டீ உடலுக்கு பாதுகாப்பானதா என்று சரியாக தெரிந்து கொள்ள வேண்டும். இப்போது அத்தகைய கர்ப்பிணிகளுக்கு எந்த மூலிகை டீயை, எவ்வளவு குடிக்க வேண்டும், அதில் என்ன நன்மை உள்ளது, பாதுகாப்பானதா, இல்லையா என்று மூலிகை டீ-க்களைப் பற்றி பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
* மிளகுக்கீரை டீ (Peppermint tea)- இந்த மூலிகை டீ-யை அதிகமாக குடிக்காமல், வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை குடிக்க வேண்டும். இதனால் சோர்வு, குமட்டல், நெஞ்செரிச்சல் போன்றவற்றை குணமாகும்.
* இஞ்சி டீ (Pure ginger tea)- நிறைய மருத்துவர்கள் இஞ்சி டீயை குடிக்க சொல்வார்கள். அதிலும் கர்ப்பத்தின் ஆரம்பத்தில் ஏற்படும் மயக்கம், வாந்தி, குமட்டல், தலைவலி மற்றும் ஒருவித சோர்வான மனநிலை போன்றவை ஏற்படும். அந்த நேரத்தில் இந்த டீயை குடித்தால், நல்லது.
* தைம் டீ (Thyme tea)- இந்த டீயை கர்ப்பிணிகள் குறைந்த அளவில் குடிப்பதால், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
* க்ரீன் டீ (Green tea)- உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் பானங்களுள் க்ரீன் டீயும் ஒன்று. அதிலும் இதனை கர்ப்பமாக இருக்கும் போது அளவாக குடித்து வந்தால், நிறைய நன்மைகளைப் பெறலாம். ஏனெனில் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், செல்கள் பாதிப்படைவதை தடுத்து, இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். மேலும் இரத்த அழுத்தத்தை குறைக்கவும் செய்யும். ஆனால் இதனை அளவுக்கு அதிகமாக கர்ப்பிணிகள் அருந்தக்கூடாது. ஏனெனில் இவை பின் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் ஆசிட்டை உடலில் உறிஞ்சாமல் செய்துவிடும்.
* சீமைச்சாமந்தி டீ (Chamomile tea)- இது கர்ப்பிணிகளுக்கு ஏற்ற மற்றொரு சிறந்த மூலிகை டீ. அதிலும் தூக்கமின்மையால் அவஸ்தைப்படும் கர்ப்பிணிகள், இந்த டீயை குடித்தால், மனம் ரிலாக்ஸ் ஆவதோடு, நிம்மதியான தூக்கமும் வரும்.
* ராஸ்பெர்ரி இலை டீ (Raspberry leaf tea)- சில கர்ப்பிணிகள் பிரசவத்திற்கு முன் ராஸ்பெர்ரி இலையால் செய்யப்படும் டீயைக் குடித்து, குறைப் பிரசவம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த டீயைப் பருகும் முன், மருத்துவரிடம் ஆலோசனைப் பெறுவது நல்லது.
* துளசி டீ (Tulsi tea)- இந்த துளசி டீயை குடித்தால், காலையில் ஏற்படும் சோர்வு மற்றும் வாந்தி போன்றவை தடுக்கப்படும். இந்த டீயை மருத்துவரின் கண்காணிப்பின் கீழ் குடிக்க வேண்டும். இவையே மூலிகை டீ-க்களைப் பற்றிய உண்மையான கருத்துக்கள். எனவே எந்த ஒரு மூலிகை டீயை குடிக்கும் முன்பும் மருத்துவரிடம், ஆலோசனைப் பெற்று பின் பருக ஆரம்பிக்க வேண்டும்.