Author Topic: இத‌ய‌மே இறைவ‌னின் ஆல‌ய‌ம்  (Read 1240 times)

Offline thamilan

நீரே தாகம் தணிக்கும்
என் கிறான் ஒருவன்
இல்லை பானியே தாகம் தணிக்கும்
என்கிறான் மற்றொருவன்
இல்லை இல்லை
வாட்ட‌ரே தாக‌ம் த‌ணிக்கும்
என்கிறான் இன்னொருவ‌ன்

மூவரும் அடித்துக் கொண்டு
சாகிறார்கள்
தாகம் தணியாமலே
இது தான்
மதவாதிகளின் கதை

பொருள் ஒன்று தான்
பெயர் தான் வேறு வேறு
இதை புரிந்து கொள்ளாத‌
அறியாமையே காரணம்

இறைவனை அறியாதவனே
இறைவனின் பெயரால் சண்டையிடுகிறான்
சண்டையிடுபவன் மதவாதியல்ல
வெறும் மதம் பிடித்தவன்

வ‌லையில் நீர் அக‌ப்ப‌டாது
ம‌த‌ம் பிடித்த‌வ‌னிட‌ம்
ம‌கேச‌ன் அக‌ப்ப‌ட‌மாட்டான்

ப‌ற‌க்கும் போது
ச‌த்த‌மிடும் வ‌ண்டு
பூவின் மேல‌ம‌ர்ந்து
தேன் அருந்தும் போது அமைதியாகிவிடும்
இறைவ‌னை அடையாத‌வ‌னே
சர்ச்சைக‌ள் செய்கிறான்
அடைந்த‌வ‌ன் அமைதியாகி விடுகின்றான்

எல்லா பூவிலும் தேன் இருக்கிற‌து
என‌ அறியும் வ‌ண்டு
பூவிட‌ம் பேத‌ம் பார்ப்ப‌தில்லை
ஞானிக‌ளும் அப்ப‌டித்தான்

ஒருவ‌ன் ஆல‌ய‌த்தை இடித்துவிட்டு
ம‌சூதி க‌ட்டுகிறான்
இன்னொருவ‌ன் ம‌சூதியை இடித்துவிட்டு
ஆல‌ய‌ம் க‌ட்டுகிறான்

இவ‌ர்க‌ள் வ‌ண‌ங்குவ‌து
க‌ட்டிட‌ங்க‌ளைத்தான்
க‌ட‌வுளை அல்ல‌

இத‌ய‌மே இறைவ‌னின்
ஆல‌ய‌ம்
க‌ட‌வுளின் ப‌க்த‌ன்
க‌ட‌ப்பாரை ஏந்த‌ மாட்டான்
பூக்க‌ளை தொடுக்கும்
நாரையே ஏந்துவான்

இறைவ‌ன்
எல்லா இட‌ங்க‌ளிலும் இருக்கிறான்
என்ப‌தை அறிந்த‌வ‌ன்
இட‌ஒதுக்கீடு செய்வானா?
இறைவ‌ன்
எல்லா உயிர்க‌ளிலும் இருக்கிறான்
என்ப‌தை அறிந்த‌வ‌ன்
பிற‌ உயிர்க‌ளை ப‌கைப்பானா

Offline Global Angel

Re: இத‌ய‌மே இறைவ‌னின் ஆல‌ய‌ம்
« Reply #1 on: October 01, 2011, 08:08:08 PM »
nalla karuthula kavithai thamlan

 :D :D :D :D :D :D :D
Quote
எல்லா பூவிலும் தேன் இருக்கிற‌து
என‌ அறியும் வ‌ண்டு
பூவிட‌ம் பேத‌ம் பார்ப்ப‌தில்லை
ஞானிக‌ளும் அப்ப‌டித்தான்
ithu üasangalukumporunthum.... ;D ;D ;D ;D ;D ;D ;D ;D ;D ;D ;D ;D ;D ;D[/b][/color]