விரல் மீட்டி
உன் சலங்கைகள் கூட்டி
நெடுவானம் தரை இறங்க
மின்னொளியில் என் தேவதை..
இறக்கை கட்டி பறக்க
தேடாதோ என் நெஞ்சம்
வாடாதோ என் மஞ்சம்..
வெள்ளி படகில்
நீ பறக்கிறாய்
தன்னிலை மறந்து
நான் இருக்க
உன் நிலை
என் நிலை ஆனதோ...
சுவற்றில் விழுந்து எழும்
பந்தாய் நான் மாற
என்னை அடக்கி
ஆட் கொண்டாயடி..