உணவுகளிலேயே சாலட் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான ஒன்று. ஏனெனில் இதில் எந்த ஒரு பொருளையும் அடுப்பில் வைத்து, அதில் உள்ள சத்துக்களை வெளியேற்றி சாப்பிடுவதில்லை. இதனால் அதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு முழுமையாகக் கிடைக்கிறது. டயட்டில் இருப்போர் நிறைய பேர் இந்த மாதிரியான உணவைத் தான் சாப்பிடுவார்கள்.
ஏனெனில் இந்த மாதிரியான உணவில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் குறைவாக இருக்கும். எனவே காலை அல்லது மாலை வேளையில் இந்த மாதிரி செய்து சாப்பிட்டால், உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். சாலட்டில் நிறைய வகைகள் உள்ளன. அவற்றில் இப்போது பன்னீர் வெஜிடேபிள் சாலட் எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
பன்னீர் - 1 கப் (நறுக்கியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
வெள்ளரிக்காய் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது) க
டுகு தூள் - 1/2 டீஸ்பூன் எ
லுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - 1 டீஸ்பூன் (நறுக்கியது)
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பன்னீரை போட்டு 2-3 நிமிடம் ரோஸ்ட் செய்ய வேண்டும்.
பின் அதனை இறக்கி, ஒரு பௌலில் போட்டு, நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய், வெள்ளரிக்காய் மற்றும் தக்காளி சேர்த்து, கடுகு தூள், உப்பு போன்டடு நன்கு கிளற வேண்டும்.
இறுதியில் அதில் எலுமிச்சை சாற்றை பிளிந்து, கொத்தமல்லியை தூவி பரிமாறவும்.
இப்போது பன்னீர் வெஜிடேபிள் சாலட் ரெடி!!!