Author Topic: பொரித்த குழம்பு  (Read 717 times)

Offline kanmani

பொரித்த குழம்பு
« on: January 25, 2013, 12:36:48 PM »

    கத்தரி, உருளை, வாழை, முருங்கை கலவை - ஒரு கப்
    புளி - கோலி அளவு
    சின்ன வெங்காயம் - 10
    தக்காளி - ஒன்று
    பூண்டு - 7 பல்
    தேங்காய் - ஒரு மேசைக்கரண்டி
    ஆல் பர்பஸ் பொடி -ஒரு தேக்கரண்டி
    மிளகாய் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
    பெருங்காயம், உப்பு, கொத்தமல்லித் தழை - தேவைக்கு
    தாளிக்க:
    கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, உளுந்து, கடலைப் பருப்பு
    எண்ணெய்

 

 
   

புளியைக் கரைத்து கொள்ளவும். தேங்காய், ஆல் பர்பஸ் பொடி, 2 சின்ன வெங்காயம், 3 பல் பூண்டு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
   

வெங்காயம், பூண்டு, கத்தரி, உருளை, வாழை, முருங்கை கலவை, தக்காளி, புளி நீர், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
   

நன்கு வெந்ததும் தேங்காய் விழுது சேர்க்கவும்.
   

எண்ணெயில் கடுகு, சீரகம், பெருங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, நசுக்கிய 3 பல் பூண்டு தாளித்து சேர்க்கவும். கொத்தமல்லித் தழை தூவி ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
   

சுவையான பொரித்த குழம்பு தயார்.