என்னை தேடி வந்ததும் என் எண்ணமெல்லாம் கலந்து
என்னுளே எழிலாய் நிற்பதும் எதனாலே
வார்தையொன்று பேசிடவே வசமாகியே உன் உள்ளம்-என்
வாசல் வரை வந்து சென்றதும் எதனாலே
இரவின் மடியில் நம்மிருவரும் இணைந்திருந்த நேரங்களில்
இனிமையாக ஓர் இல்லறம் எதனாலே
தெரியாததும், புரியாததும் தெளியவைத்தும் புரியவைத்தும்
தென்றலாய் என்னை வருடியதும் எதனாலே
கண் உறங்கும் வேளையிலும் கண்ணாடி முன் நிற்கும் வேளையிலும்
கண் முன் தோன்றி மறைவதும் எதனாலே
கொஞ்சமாய் கொஞ்சும் குரலிசை கெஞ்சும், உன் நெஞ்சம்
மலர்மஞ்சம் நிதம் வேண்டுவதும் எதனாலே.
என் வானின் நிலவும் இன்று சூரியனாய் உன்னையே நினைத்து
எரிவதும் எதனாலே
உன்னையே நினைத்து உருகிகொண்டிருக்கும் என்னுயிரை
உன் மௌனத்தால் இவ்வேளையில்
மெது மெதுவாய் கொல்வதும் எதனாலே.