உனை அறியா எனை அறிந்து நின்றனே
ஊடகச்சாதனங்களை எதை தூதுவிட்டாய்
உனை திரும்பி பார்க்கச்சொல்லி
உள்ளம் சொருகி கண்கள் கரைய கண்டேன்
உன் கண் புருவ மையை கண்டு கருகியது என் கருவிழி
உனக்குள் ஊடுருவ துவாரம் கண்டேன் உன் விழிகளை தவிர
மற்றதை மறந்தேன் விழிகளுக்குள் பயணிக்க வரிசையில் நின்றேன்
இமைகளை மூடி பாதை இல்லை என்றாய்
நீ கண் சிமிட்டுவதை தெரியாமல் தவறாய் புரிந்தேன்
ஓர் நொடி விட்டு விலகிய இமைகளை பாராட்டி உள்ளே
நுழைந்தேன் எங்கிருந்து அழைத்தாயோ கை என்னும்
அவற்றை கண்ணோடு கசக்கி கண்ணிரோடு வெளியேற்றியதுதூசியுடன் என்னை
பிரிவாய் என்று எதிர் பாராமல் எனை அறியா நின்றனே
மறையும் வரை மறுக்காமல் பார்த்தனே மறுபடியும் வருவாய் என..