Author Topic: பொட்டேட்டோ சேண்ட்விச்  (Read 635 times)

Offline kanmani

பொட்டேட்டோ சேண்ட்விச்
« on: January 23, 2013, 10:18:59 AM »

    பிரெட் - 8
    உருளைகிழங்கு - 3
    ஸ்ப்ரிங் ஆனியன் - சிறிது
    உப்பு - தேவைக்கு
    குடமிளாகாய் - சிறிது
    பூண்டு - 2 பல்
    மஞ்சள்தூள் - சிறிது
    சீரகதூள் - சிறிது
    பெப்பர்தூள் - சிறிது
    பட்டர் - தேவைக்கு

 

    முதலில் உருளைகிங்கை வேகவைத்து தோல் நீக்கி நன்கு மசித்து வைக்கவும்.
    பிரெட்டின் ஓரங்களை நீக்கி சரிபாதியாக நறுக்கிவைக்கவும்.
    பின்பு மசித்த உருளைகிழங்கில் தூள்வகைகள்,உப்பு சேர்த்து பிசைந்துகொள்ளவும்.
    பின்பு பூண்டை துருவி சேர்க்கவும். குடமிளகாயையும், ஸ்ப்ரிங் ஆனியனையும் பொடியாக நறுக்கி சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
    பின் கட் செய்துவைத்த பிரெட்டின் மீது பட்டரை தேய்த்து உருளைகலவையை நன்கு தேய்த்து வைக்கவும்.
    ஒரு தவாவில் சிறிது பட்டர் போட்டு இந்த பிரெட் துண்டுகளை டோஸ்ட் செய்யவும்.
    குழந்தைகளுக்கு பிடித்த பொட்டேடோ சேண்ட்விச் ரெடி.
    இதை சேண்ட்விச் மேக்கரில் செய்வதானாலும் செய்யலாம்