மட்டன் - கால் கிலோ
இஞ்சி, பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 4
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகு, சீரகத் தூள் - ஒரு தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய்
உப்பு
மட்டனை நன்கு சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
மட்டன் துண்டுகளுடன் இஞ்சி, பூண்டு விழுது, உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் 3 விசில் வரும் வரை நன்கு வேக விடவும்.
கறி வெந்து நீர் வற்றி இருக்கும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
தாளித்தவற்றில் வேக வைத்த கறி சேர்த்து, மஞ்சள் தூள், மிளகு, சீரகத் தூள் சேர்க்கவும்.
நன்கு சுருள வெந்து எண்ணெய் பிரியும் வரை பிரட்டவும்.
எளிதில் செய்யக்கூடிய, அதிக மசாலாக்கள் இல்லாத சுவையான உப்பு கறி ரெடி.