Author Topic: கத்தரிக்காய் புளிக் கறி  (Read 677 times)

Offline kanmani


    கத்தரிக்காய் - 3
    தக்காளி - 2
    வெங்காயம் - 2
    இஞ்சி, பூண்டு விழுது - அரை மேசைக்கரண்டி
    மிளகாய் தூள் - அரை மேசைக்கரண்டி
    மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
    பச்சை மிளகாய் - 2
    புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
    உப்பு - ஒரு தேக்கரண்டி
    கடுகு - ஒரு தேக்கரண்டி
    பட்டை - 2 சிறு துண்டு
    கிராம்பு - 2
    கொத்தமல்லித் தழை - 2 கொத்து
    எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

 
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். கத்தரிக்காயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தையும் நீளவாக்கில் நறுக்கிக் வைக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும். புளியை கால் கப் தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைத்து திக்காக கரைத்துக் கொள்ளவும்.
   
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பட்டை, கிராம்பு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள் போட்டு வதக்கவும்.

பிறகு தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழை போட்டு நன்றாக பிரட்டிவிட்டு வதக்கவும்.
   
தக்காளி நன்கு வதங்கியதும் அதனுடன் நறுக்கிய கத்தரிக்காயை போட்டு மசாலாவுடன் சேரும்படி நன்கு பிரட்டி விடவும்.
   
உப்பு சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி பிரட்டி விட்டு மூடி விடவும்.
   
6 நிமிடம் கழித்து திறந்து புளிக் கரைசலை ஊற்றி ஒரு முறை கிளறி விட்டு அதன் மேல் கறிவேப்பிலை தூவி விடவும்.
   
இந்த கலவை நன்கு பிரட்டி விட்டு மீண்டும் மூடி வைத்து 8 நிமிடம் கழித்து திறந்து கத்தரிக்காய் உடையாமல் கிளறி விட்டு இறக்கி விடவும்.
   
சுவையான கத்தரிக்காய் புளிக் கறி தயார்.