பூப்பூக்கும் வாழ்க்கையின் ஒரு அங்கம் ...
அன்பின் மொட்டு அரும்பிய அடுத்த நொடிகளில்
மலரும் பூ ....
பூக்க பருவகாலம் எதுவுமில்லை
வயது இதுவென கட்டுப்பாடில்லை
ஆண் பெண் பேதமில்லை
ஆதாயம் வேண்டி எதுவுமில்லை
எதிர்பார்ப்பு என்று ஒன்றுமில்லை ...
நான் என்ற வார்த்தை இப்பயணத்திலில்லை
நாம் என்பதைத் தவிரவும் வேறு இல்லை
பொறாமைப் பார்வை விழிகளில் இல்லை
விகற்பமாவது ஒருவரின் வெற்றி இருவரின் கண்ணில் ...
இருபதுக்கும் அறுபதுக்கும் பாலமாகும்
இன்னல்களை அழிக்க இனிதே கரம் சேரும்
உறவுகளுக்கும் ஒருபடி மேல்தான்
உலகிலேயே மிகப்பெரிய உறவுதான் ...!
நட்பின் அஞ்சல் கிடைக்கும் பட்சம்
நம்பிக்கைத் தளிர் உன்னில் பிறக்கும்
அடுத்த கணம் முயற்சியின் பக்கம் உன் சகாப்தத்தில்
சாதனைத் தொகுப்புகள் உன் சரித்திரத்தில் ....
நட்பு அன்பின் வழியே