Author Topic: முத்தத்தின் மகத்துவங்கள் - பகுதி 2  (Read 545 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
முத்தத்தின் மகத்துவத்தை
சித்தம்போல் அத்தனையும்
மொத்தமாக பதித்திட்டதாய்
மெத்தனமாய் இருந்துவிட்டேன்

மெத்தனமாய் இருந்திட்டதை
 
தித்திக்கும் தேன் கருத்தாக
எழுத்தினில் நீ பதித்திட்ட
கருத்ததுதான் சுமந்துவந்த
சுத்தமான (அன்பு) முத்தமது
சத்தமின்றி எத்திவைத்தது
பித்துபிடித்த  என் புத்திக்கு .....
********************************************************
"முத்தம்"

உச்சரிக்கப்படும்
ஒருசிலநொடிகளும்
பிரிந்திருக்க பிரியமின்றி தான்
உடனுக்குடன்
ஒட்டிக்கொள்கின்றதோ
இதழ்கள் ??


*********************************************************
உலகின் மிக மிக
அதிக முத்த்தங்களை
பரிமாறிக்கொண்டவர் தம்
பெயர் பட்டியலில்
கடற்கரை(கடல்+கரை ) க்கடுத்து
இரண்டாமிடம் பிடித்திட   
நெடுநாட்களின் ஆசை ..

தருவதும்,தந்து பெறுவதும்
நீயாக இருக்க ....
*********************************************************
கொஞ்சி கொஞ்சி
கெஞ்சி கெஞ்சி முத்தம்பல
நித்தம்நித்தம் இட்டிடுவாயென

வாழ்நாள் முழுவதும்
குழந்தையாகவே  இருந்திடும்
அரும்பெரும்  வரம் வேண்டி
கடுந்தவம் இருந்திட
தெரியாமல், துணிந்திருப்பேன் .
 


இதோ,வாலிபத்திலும் கூட
அற்பநெனக்கு ,அரும்வரமது
அதிர்ஷ்டமாய் வாய்த்திடுமென
அறியாமலே !!