Author Topic: காதல் தோல்வி எனக்கில்லை....  (Read 1201 times)

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.


காதல் தோல்வி அடைந்த உன்னை மனமார காதலிக்கிறேன்
அன்பின் ஆழத்தையும் வலியின் வடுகளையும்
உறைந்த கண்ணீரையும் சுமந்த உன் இதயம்
இனி ஏமாறக்கூடாது

மறந்து சென்றவளை நினைக்கும் உன் மனம்
உனக்காக உருகி நிற்கும் என்னை காணவில்லையா?

விலகி சென்றவளை விரும்பும் உன் இதயம்
விழிப்பார்த்து உன்னை வரவேற்கும் என் மனதை
உனக்கு புரியவில்லையா?

காதல் தோல்வியின் வலியை அறிந்த நீ
எனக்கும் அந்த வலியை தருவது முறையோ
ஆருயிரே! என்னுயிரே!

வாழ்வும் மரணமும் உன்னுடன் என
வந்துவிட்ட எனக்கு உன்னுடைய எந்த பதிலும்
காதல் சம்மதம் தான்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
Re: காதல் தோல்வி எனக்கில்லை....
« Reply #1 on: January 21, 2013, 05:04:14 PM »
வருண் மிகவும் அருமையான கவிதை நண்பா

மறந்து சென்றவளை நினைக்கும் உன் மனம்
உனக்காக உருகி நிற்கும் என்னை காணவில்லையா?

விலகி சென்றவளை விரும்பும் உன் இதயம்
விழிப்பார்த்து உன்னை வரவேற்கும் என் மனதை
உனக்கு புரியவில்லையா?

காதல் தோல்வியின் வலியை அறிந்த நீ
எனக்கும் அந்த வலியை தருவது முறையோ
ஆருயிரே! என்னுயிரே!

வாழ்வும் மரணமும் உன்னுடன் என
வந்துவிட்ட எனக்கு உன்னுடைய எந்த பதிலும்
காதல் சம்மதம் தான்



Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: காதல் தோல்வி எனக்கில்லை....
« Reply #2 on: January 21, 2013, 06:08:05 PM »
//வாழ்வும் மரணமும் உன்னுடன் என
வந்துவிட்ட எனக்கு உன்னுடைய எந்த பதிலும்
காதல் சம்மதம் தான்//

முறையீடுகளின் குரல்களாய் ஒலிக்கின்றன
இதற்கு முந்தைய‌வையெல்லாம்
இறுதிவ‌ரிப்ப‌டி
எதுவும் ச‌ம்ம‌த‌மென்றால்
முறையீடுகள் எத‌ற்காக‌ ?
« Last Edit: January 21, 2013, 07:17:59 PM by ஆதி »
அன்புடன் ஆதி

Offline Global Angel

Re: காதல் தோல்வி எனக்கில்லை....
« Reply #3 on: January 21, 2013, 07:15:52 PM »
வருண் கவிதை வரிகள் நன்று ... ஒரு சின்ன கேள்வி .. காதலில் தோல்வி அடைந்தவரை காதலிப்பது என்பது முள் வேலியில்  போட்ட துணிக்கு சமம் . எவளவோ கிழிசல்கள் வரசெயும் .. அதை எல்லாம் பொறுத்துதான் காதல் கொள்ளாலாம் .. ஆனால் நீங்கள் அவனை நினச்சுட்டு இருக்கே ... அவன் உனக்கு கொடுத்த வலியை  எனக்கு கொடுக்காதே இப்டி எல்லாம் சொல்லி எமற்றியவனை நினைக்க வைத்து அவன் மேலுள்ள கோபம் எல்லாம் திரும்பி அடிக்க அதிகமான வாய்ப்பு இருகிறதே ... முதல் காதல் பத்தி பேசாமல் இருப்பதுதான் நல்ல வழி  இது என் அபிபிராயம் ..

கவிதைகளில் வார்த்தைகள் அருமை நன்று தொடருங்கள் வருண்
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: காதல் தோல்வி எனக்கில்லை....
« Reply #4 on: January 21, 2013, 08:19:23 PM »
மறந்து சென்றவளை நினைக்கும் உன் மனம்
உனக்காக உருகி நிற்கும் என்னை காணவில்லையா?


நல்ல வரிகள் வருண் தொடருங்கள்


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்