Author Topic: ~ மொபைல் ‘ஓஎஸ் (OS)’ ஒப்பீடு: ஆன்ட்ராய்டு – விண்டோஸ் – ஐஒஸ்......! ~  (Read 1401 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226275
  • Total likes: 28751
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
மொபைல் ‘ஓஎஸ் (OS)’ ஒப்பீடு: ஆன்ட்ராய்டு – விண்டோஸ் – ஐஒஸ்......!



மொபைல் இயங்குதளம்னா என்ன?

மொபைல் போன்கள் இல்லாதவர்கள் இருக்கிறார்களா என்றால் இல்லவே இல்லை என்பதுதான் பதில். அனைவராலும் உபயோகப்படுத்தப்படும் இந்த மொபைல் போன்கள், மென்பொருள் மாறும் வன்பொருள்கள் சேர்ந்தவையே!

இதில் மொபைல்களுக்கான இயங்குதளமும் ஒருவகை மென்பொருள்தான். இந்த இயங்குதளம் இல்லாமல் எந்த போனும் இயங்காது. விலை மதிப்பான ஸ்மார்ட்போன்கள்தான் இயங்குதளத்தில் செயல்படுகிறது என நினைக்கவேண்டாம். சாதாரண போன்களும் இயங்குதளத்தின் மூலமே செயல்படும்.

இயங்குதளங்கள் பல்வேறு நிறுவனங்களால் பல்வேறு பெயர்களில் உருவாக்கப்படுகின்றன. அவையாவன,
•   கூகுள் – ஆன்ட்ராய்டு,
•   சாம்சங் – படா,
•   மைக்ரோசாப்ட் – விண்டோஸ் போன் ஓஎஸ்,
•   ஆப்பிள் – ஐஒஸ்,
மேலும் சிம்பியன், ஜாவா என பல்வேறுவகையான கைபேசியில் பயன்படும் இயங்குதளங்கள் மொபைல் சந்தையில் உள்ளன.

அவற்றில் இன்று நாம் ஆன்ட்ராய்டு 4.1, விண்டோஸ் போன் 8 ஓஎஸ், ஐஒஸ் 6 ஆகியவற்றை ஒப்பீடு செய்யலாம். இதற்கான விரிவான தகவல்கள் ....

================================

முதலில் ஆன்ட்ராய்டு 4.1 இயங்குதளம்:

கூகுள் நிறுவனத்தின் அற்புதமான படைப்பாகும்! விபரங்கள் விரிவாக கீழே!

கிடைக்கும் மொத்த அப்ளிகேசன்கள்: 6.0 + லட்சங்கள்,
ஒரே நேரத்தில் மற்றவேலை: அற்புதமாக செய்யும்,
விட்ஜெட்கள்: உண்டு
அதிகப்படுத்தும் நினைவகம்: உண்டு
அதிக தரமான திரை: பயன்படுத்தலாம்,
ஃபைல் மேனேஜர்: உண்டு
ப்ளாஷ் ஃபைல் சப்போர்ட்: உண்டு
இணையமில்லாத மேப்கள்: பார்க்கலாம்.
எதிலிருந்து உருவாக்கப்பட்டது? : லினக்ஸ்,

=================================

அடுத்ததாக ஐஒஸ் 6 இயங்குதளம்:

ஆப்பிள் நிறுவனத்தின் படைப்பாகும்! விபரங்கள் விரிவாக கீழே!

கிடைக்கும் மொத்த அப்ளிகேசன்கள்: 6.5 + லட்சங்கள்,
ஒரே நேரத்தில் மற்றவேலை: செய்யும்! ஆனால் குறைவு.
விட்ஜெட்கள்: இல்லை,
அதிகப்படுத்தும் நினைவகம்: இல்லை,
அதிக தரமான திரை: பயன்படுத்தலாம்,
ஃபைல் மேனேஜர்: இல்லை,
ப்ளாஷ் ஃபைல் சப்போர்ட்: இல்லை,
இணையமில்லாத மேப்கள்: இல்லை. பணம் கொடுத்து பயன்படுத்தலாம்,
எதிலிருந்து உருவாக்கப்பட்டது? : டிராவின் என்றதிலிருந்து,

====================================

கடைசியாக விண்டோஸ் போன் 8 ஓஎஸ்:

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மொபைல் போன்கள் மற்றும் டேப்லெட்களுக்கான அற்புதமான படைப்பாகும்! விபரங்கள் விரிவாக கீழே!

கிடைக்கும் மொத்த அப்ளிகேசன்கள்: 1 + லட்சம்,
ஒரே நேரத்தில் மற்றவேலை: செய்யும். ஆனால் குறைவுதான்.
விட்ஜெட்கள்: உண்டு
அதிகப்படுத்தும் நினைவகம்: உண்டு
அதிக தரமான திரை: பயன்படுத்தலாம்,
ஃபைல் மேனேஜர்: இல்லை,
ப்ளாஷ் ஃபைல் சப்போர்ட்: அப்படீனா?
இணையமில்லாத மேப்கள்: பார்க்கலாம்.
எதிலிருந்து உருவாக்கப்பட்டது? : விண்டோஸ் NT இயங்குதளம்,

இவற்றில் எந்த இயங்குதளம் மொபைலுக்கு சிறந்தது?

ஆன்ட்ராய்டு 4.1, விண்டோஸ் போன் 8 ஓஎஸ், ஐஒஸ் 6 ஆகியவற்றை ஒப்பீடு செய்தோம். இவற்றில் எந்த இயங்குதளம் சிறந்ததென ஒருநிறுவனம் நடத்திய ஆய்வின் தகவல்கள் பின்வருமாறு,

•   நம்பர் 1 – ஆன்ட்ராய்டு 4.1 இயங்குதளம் – சிறந்தது!
•   2 – விண்டோஸ் போன் 8 ஓஎஸ் – நன்று!
•   3 – ஐஒஸ் 6 இயங்குதளம் – சுமார் தான்.

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226275
  • Total likes: 28751
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/