Author Topic: ~ ஆலிவ் ஆயில் எலும்புக்கு உறுதி ~  (Read 708 times)

Offline MysteRy

ஆலிவ் ஆயில் எலும்புக்கு உறுதி



ஆலிவ் ஆயில் எலும்புகளுக்கு வலுவளிப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சமையலில் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தும் பழக்கம் இந்தியா உள்பட உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், ஆலிவ் எண்ணெயின் மருத்துவ குணம் தொடர்பாக ஸ்பெயினின் கிரோனா பகுதியில் உள்ள மருத்துவ ஆய்வு நிறுவனம் சார்பில் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. டாக்டர் ஜோசப் ட்ருயிட்டா தலைமையில் 2 ஆண்டுகள் இந்த ஆய்வு நடைபெற்றது.

ஆய்வுக்காக எலும்பு பாதிப்பால் அவதிப்படுபவர்கள் பட்டியல் மருத்துவக் குறிப்புகளில் இருந்து தயாரிக்கப்பட்டது. அவர்களுக்கு ஆலிவ் எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவுகள் தொடர்ந்து வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. இதில் அவர்களது எலும்புகள் வலுவடைந்து இருந்தது தெரியவந்தது. எலும்புகளை உறுதிப்படுத்தும் குணம் ஆலிவ் ஆயிலுக்கு இருப்பதை டாக்டர்கள் உறுதி செய்துள்ளனர்.