பொது அறிவு:-
* ஒரு நெருப்புக்கோழியின் முட்டை, 22 கோழி முட்டைகளுக்கு சமம்.
* ஒரு புள்ளியில் சுமார் 70 ஆயிரம் அமீபாக்களை நிரப்பலாம்.
* உலக வானிலை மையம் அமைந்துள்ள இடம், ஜெனீவா.
* யுரேனஸ் கிரகம் சூரியனைச் சுற்றி வரும் காலம், 84 ஆண்டுகள்.
* உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை, டிரான்ஸ்-கனடா (8 ஆயிரம் கிலோமீட்டர்).
* உலகிலேயே அதிக அளவில் மீன் பிடிக்கும் நாடு, ஜப்பான்.
* புத்தர் பிறந்த இடம், லும்பினி.
* `புனித நகரம்' என்று அழைக்கப்படுவது, ஜெருசலேம்.
* `பூகோள சொர்க்கம்' எனப்படும் இடம், காஷ்மீர் (இந்தியா).
* உலகின் மிகப்பெரிய தீபகற்பம், அரேபியா.
* தொலைக்காட்சி நிலையங்கள் அதிகம் உள்ள நாடு, அமெரிக்கா.
* ஜப்பான் நாட்டில் தான் அதிக அளவில் ஆட்டோக்கள் தயாரிக்கப்படுகின்றன.
*`கிரையோஜெனிக் என்ஜின்கள்', விண்வெளி ஓடத்தில் (ராக்கெட்) பயன்படுத்தப்படுகின்றன.
* சராவதி ஆற்றின் `ஜோக்' அருவி தான் (கர்நாடகா), இந்தியாவிலேயே மிக உயரமானது.
* மிகப்பெரிய பூ பூக்கும் தாவரம், `ராப்லேசியா'.
* பச்சோந்தியின் நாக்கு, அதன் உடலைப்போன்று இரண்டு மடங்கு நீளமாக இருக்கும்.
*100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்படும் பொருள், கண்ணாடி.