மலை வேம்புவின் மகத்துவங்கள்
அதிக அளவில் பிராண வாயுவை வெளியிடக் கூடியது
சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு மலைவேம்புவின் பூவும் இலையும் ஒரு வரப்பிரசாதம்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
இலையை நீரில் கொதிக்க வைத்துக் குளித்தால் உடல் அசதி நீங்கி புத்துணர்வு கிடைக்கும்.
உடலிலுள்ள நச்சுப் பொருள்களை வெளியேற்றும்.
இதமான காற்று கிடைக்கும்.
பலவிதமான சிறிய பூச்சிகளும், பறவைகளும் இந்த மரத்தில் அடைக்கலம் பெற தேடி வரும். குறிப்பாக வெள்ளை நிற சிலந்தி மற்றும் பச்சை நிறத்தில் தேள் மாதிரியான ஒரு சிறிய பூச்சி.
இதன் மலர் ஒருவித சுகந்த மணம் உடையது.
காய்கள் பச்சை ஆப்பிள் போன்று சிறிய வடிவில் இருக்கும்.
விதையை தின்ன குயில்கள் விரும்பி வரும்.
சிறு குழந்தைகள் இந்த மரத்தடியில் விளையாடுவது மிக சிறப்பு. நாளடைவில் அவர்களுக்கு சளி பிடிக்கும் தொல்லை குறைந்து விடும்.
மரம் பார்க்க மிக அழகாகவும் இருக்கும். விரைவாக வளரும் தன்மை கொண்டது.