Author Topic: ~ அருமையான கவிதைகள் ~  (Read 2194 times)

Offline MysteRy

~ அருமையான கவிதைகள் ~
« on: January 10, 2013, 02:33:05 PM »


உன் தைல விரல்களுக்கு
ஏங்குகின்றன
என் தலைவலிகள்…
எண்பதிலும் !!!

Offline MysteRy

Re: ~ அருமையான கவிதைகள் ~
« Reply #1 on: January 10, 2013, 02:34:58 PM »


ஒரு சிறைப்பட்ட பறவை ஒன்றின்
சுதந்திர தாகமாய்
உன்னுடன் சில நிமிடங்கள் மட்டுமே
பறக்க துடிக்கின்றேன்
நீளும் உன் நினைவுகளின் தூரத்தில்
நீ இன்றி நான் வாழ்வதும்
உயிரின்றி இந்த உடல் மண்ணில்
வீழ்வதும் ஒன்றே...

Offline MysteRy

Re: ~ அருமையான கவிதைகள் ~
« Reply #2 on: January 10, 2013, 02:37:27 PM »


நேசிக்கும் ஆணிடம்
ஏதோ ஒரு நொடியில்
உணர முடிகிறது அப்பாவை... ♥
அல்லது
நொடியே என்றாலும்
அப்பாவை உணரும்
ஆண்களிடம் மட்டுமே
நேசம் வருகிறது... ♥

Offline MysteRy

Re: ~ அருமையான கவிதைகள் ~
« Reply #3 on: January 10, 2013, 04:07:31 PM »


கன்னமிழைத்துக்
காது கடித்துக்
காதலைச்சொல்கையில்
போடி புண்ணாக்கென்றேன்.
என்னென்ன பெயர் வைப்பீர்களெனக்கு
பித்தாகும் போதெல்லாம்
எதுவெல்லாம் வருகிறதோ
அதையெல்லாம்
வைப்பேனென்றேன்.
ராட்சசியாய்
அன்புப் பேயாய்
நாயாய்
செல்லமாய்
பட்டுக்குட்டியாய்
செல்லக்குஞ்சாய்
எத்தனை பெயர்
எண்ணிக்கையெல்லாம்
இருப்பதில்லை.

Offline MysteRy

Re: ~ அருமையான கவிதைகள் ~
« Reply #4 on: January 10, 2013, 04:16:19 PM »


நீ நெற்றிமுத்தம் பதித்துத்
துயிலெழுப்பும் நாட்களில்,
வரம்கொடுத்து விடுகின்றன
அனைத்து தேவதைகளும்...

Offline MysteRy

Re: ~ அருமையான கவிதைகள் ~
« Reply #5 on: January 10, 2013, 04:21:34 PM »


அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா?
அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா?...
அஞ்சுவதி்ல் அஞ்சி நின்றால் அச்சமாகுமா?
அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா?

Offline MysteRy

Re: ~ அருமையான கவிதைகள் ~
« Reply #6 on: January 10, 2013, 04:24:21 PM »


கரங்களோடு கரங்கள்
கோர்த்து நடக்க
விரல்களில் இருந்து
உதிர்கிறது குளிர்.

Offline MysteRy

Re: ~ அருமையான கவிதைகள் ~
« Reply #7 on: January 10, 2013, 04:27:04 PM »


உன்னோடு வாழும்
காலம் யாவும்
என்னோடு வாழும்
காதல்.

Offline MysteRy

Re: ~ அருமையான கவிதைகள் ~
« Reply #8 on: January 10, 2013, 04:28:40 PM »


எத்தனை முறை
தோற்கடித்தாலும்
என் கனவுகளைத்
தூக்கிக் கொண்டு
ஓடி வருவேன் தான்
உன்னிடமே... ♥ ♥

Offline MysteRy

Re: ~ அருமையான கவிதைகள் ~
« Reply #9 on: January 10, 2013, 04:30:14 PM »


என்
எல்லா துயரங்களையும்
உன் ஒற்றை முத்ததோடு
புதைக்கிறாய் நீ.. ♥ ♥

Offline MysteRy

Re: ~ அருமையான கவிதைகள் ~
« Reply #10 on: January 10, 2013, 04:31:51 PM »


பெரும்பாலும் ஹ்ம்ம் என்ற
பதிலையே எதிர்பார்கிறேன்
என் எல்லா கேள்விக்கும்..
அப்படியே இந்த முத்தத்திற்கும். ♥ ♥

Offline MysteRy

Re: ~ அருமையான கவிதைகள் ~
« Reply #11 on: January 10, 2013, 04:33:22 PM »


அட போடா..
உனக்கிருக்கும்
காதலுக்கு
நீ
இன்னும்
நூறு
மடங்கு
கோபிக்கலாம் ♥ ♥

Offline MysteRy

Re: ~ அருமையான கவிதைகள் ~
« Reply #12 on: January 10, 2013, 04:34:53 PM »


உனைக்குறித்தான
என் அழகான உணர்வுகளை நானும்,
எனைக்குறித்து நீயும்
பகிர்ந்துகொள்கிறோம்..
இன்னும் அழகாகிறது காதல் ♥ ♥

Offline MysteRy

Re: ~ அருமையான கவிதைகள் ~
« Reply #13 on: January 10, 2013, 04:36:48 PM »


அழுகையை
கடன் வாங்கிக் கொள்ள
முடியுமென்றால்,
எப்படியாவது வாங்கிக் கொள்வேனடி
உன்னிடமிருந்து... ♥

Offline MysteRy

Re: ~ அருமையான கவிதைகள் ~
« Reply #14 on: January 10, 2013, 04:38:10 PM »


என்னுடன் -நீ
போட்ட சண்டைகள்
அத்தனையும்
காதலாய் போனது இன்று.