Author Topic: ~ நீரிழிவைக் கட்டுப்படுத்தும் வெண்டைக்காய்...! ~  (Read 605 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226362
  • Total likes: 28814
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
நீரிழிவைக் கட்டுப்படுத்தும் வெண்டைக்காய்...!



உலகளவில் மனிதர்களை அச்சுறுத்தும் நோய்களில் ஒன்று நீரிழிவு. உலக அளவில் இந்தியாவின் தான் அதிகமான பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் சுமார் 5 கோடிப் பேருக்கு நீரிழிவு நோய் உள்ளது. இந்நோயை முழுமையாக நிவர்த்தி செய்ய முடியாவிட்டாலும், கட்டுப்படுத்த முடியும். இதற்கான பல வழிமுறைகளை இயற்கையே நமக்கு கற்றுத் தருகிறது. வெண்டைக்காய் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் சிறந்து விளங்குகிறது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் உணவுப் பழக்கவழக்கத்தில் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும். குறைந்த அளவு கார்போ ஹைட்ரேட் உள்ள உணவுகளைத்தான் அவர்கள் அதிகம் உண்ணுவர். வெண்டைக்காயில் குறைந்த அளவே கிளசிரி உள்ளதால், இது நீரிழிவு நோயாளிக்கு மிகுந்த உதவியாக இருக்கிறது. அதுட்டுமட்டுமன்றி ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்துகிறது. உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரையின் அளவு அதிகரிப்பு, சிறுநீரைப் பாதிக்கக் கூடியது. ஆனால், வெண்டைக்காய் ரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்துவதால், சிறுநீர் நோய்களை தடுக்கிறது. அதிலும் சமைத்த வெண்டைக்காயை விட சமைக்கப்படாத வெண்டைக்காய் தான் நீரிழிவை கட்டுப்படுத்துவதில் சிறந்து விளங்குகிறது. இதிலுள்ள பைபர் சத்தானது ஜீரணத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் பெற்றது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் மருத்துவத்தோடு இயற்கையையும் நம்பினால் நோயின் கடுமையிலிருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும்.