Author Topic: ~ "நெல்லிக்காயின் சிறப்பு குணம்" ~  (Read 569 times)

Offline MysteRy

"நெல்லிக்காயின் சிறப்பு குணம்"




விட்டமின் 'சி' சத்து அதிக அளவில் உள்ளது. உடலுக்கு எதிர்ப்பு சக்தியைத் தருவதற்கும், கண்களை இளமையாக வைத்திருக்கவும் உதவுகிறது. இதில் லெனின் என்னும் வேதிப்பொருள் உள்ளது. எனவே இதனை வெயிலில் காயவைத்தாலும் இதிலுள்ள விட்டமின் சத்து குறையாது. மாறாகக் கூடவே செய்யும். நம் உடலில் தினந்தோறும் நடைபெறும் வளர்சிதை மாற்றத்தில் அத்தியாவசியமான காரணிகளுடன் இணைந்து நோயைத்தரக் கூடிய ஆக்சிஜன் அயனிகள் ஃப்ரீரேடிக்கல்ஸ் எனப்படுகின்றன.

மருத்துவ பயன்கள்;

1.தலைமுடி கருத்து நீண்டு வளர உதவுகிறது.

2.இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.

3.கல்லீரல் வேலை செய்ய உதவுகிறது.

4.ஞாபக சக்தியை அதிகரிக்கப் பயன்படுகிறது.

5.இரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கிறது.

6.நகம், பல் ஆகியவற்றை பலப்படுத்துகிறது.

7.முகச்சுருக்கத்தைக் குறைத்து இளமைத்தோற்றத்தைத் தருகிறது.

8.இன்சுலின் சுரப்பை அதிகரித்து இரத்தத்தில் குளுக்கோஸின் அளவைக்

குறைக்கிறது. இதன் மூலம் நீரழிவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

இலக்கியத் தொடர்பு;

சங்ககாலத் தமிழ் புலவர் ஔவையாருக்கு ஒரு முறை நீண்டநாள் உயிர்வாழும் சிறப்புடைய நெல்லிக்கனி ஒன்று கிடைத்தது. அதன் சிறப்பை அறிந்து.அதனைத் தான் உண்ணாமல் மன்னன் அதியமான் நெடுநாள் வாழ வேண்டி மன்ன்னுக்கு அக்கனியைக் கொடுத்த்தாகத் தமிழ் இலக்கியம் கூறுகிறது.

''உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே''

என்ற திருமூலரின் உண்மை மொழியைப் பின்பற்றுவோம்;நீண்ட ஆரோக்கிய வாழ்வை வாழ்வோம்.

தாவரவியல் பெயர் - எம்பிளிகாஅபியன்லிஸ்

தமிழ் -நெல்லிக்காய்

சமஸ்கிருதம் -அமலிகா

ஹிந்தி -ஆம்லா

குஜராத்தி -ஆம்லா

மலையாளம் -நெல்லிக்கா

கன்னடம் -நெல்லி