Author Topic: பொங்கல் சிறப்பு கவிதை நிகழ்ச்சி ..  (Read 1282 times)

Offline Global Angel

பொங்கல் சிறப்பு கவிதை நிகழ்ச்சி ..


நண்பர்கள் கவனத்திற்கு எதிர் வரும் பொங்கல் தினத்தை முனிட்டு .. சிறப்பு கவிதை நிகழ்சிக்காக தங்கள் கவிதைகளை வழங்குமாறு கேட்டுகொள்கிறோம் ... நண்பர்கள் இணையதள வானொலியூடாக உங்கள் கவிதைகள் மூலமான வாழ்த்துகள் நண்பர்களை சென்றடைய வேண்டுமானால் எதிர்வரும் வெள்ளி கிழமைக்கு முன்பாக கவிதைகளை பதிவிடுமாறு கேட்டுக்கொள்ள படுகின்றீர்கள்



நன்றி
« Last Edit: January 02, 2015, 10:54:08 PM by Forum »
                    

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
சக்கரம் போல் சுழலும் பூமாதேவியே
சூரியனை கடவுளாய் வணங்கி
தமிழ் மண்ணை காணிக்கையாய்
மனிதற்கு வழங்கினாய் !

மனிதன் உயிர் வாழ வாழ்வு ஆதாரமாய்
காற்றை கொடுத்து சுவாசிக்க செய்தாய்
ஆகாயம் உதவி நாடி நீ கொடுத்து
தாகத்தை போக்கி தாரணி செழிக்க ..

விதை கொடுத்து ஆடிமாதத்தில்
விதை விதைத்து கழனி நிறைத்து
பச்சை பயிரை கதிராய் மாற்றி
மார்கழி மாதத்தில் மாடத்தில்
சேமிக்க செய்த அன்னையே !

  வாழ்வதற்கு ஆதாரம் கொடுத்த
கொடை வள்ளலே வருக வருக
நான் பெற்ற சந்தோஷத்தில்
உணக்க புது பானை புது அரிசியால் ....

பொங்கல் வைத்து சூரிய கடவுள்கு
பூசை படைக்கும் நான் இன்று
நல்ல நேரம் பார்த்து தீ மூட்டி
மண் வளம் கொடுத்த பூமித்தாய் ...

நினைவாக மன்பானையால்
பால் ஊற்றி கொதிக்க வைத்து
சூரிய கடவுள் தாரிசனம்
தரும் வேலையில் பால் பொங்க ...

பெரியவர்கள் அனைவரும் சூரிய
கடவுளை பார்த்து கோலாவை இட்டு
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல் முழங்கி ....

புது அரிசியை பானையில் இட்டு
அதில் சுவை மிகுந்த பழங்கள்
இன்னிப்பு கலந்த பொங்கலை
சூரியனுக்கு படைக்கும் நாள்
பொங்கல் திரு நாள் !
« Last Edit: January 11, 2013, 05:41:50 AM by Thavi »
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
பொங்கல்
*************
மண்ணுக்கும் மனிதனுக்கும் உள்ள
பந்தத்தை சொல்லும் திருநாள் ...
தனக்காக உழைக்க உதவிய அனைத்திற்கும் 
நன்றி தெரிவிக்கும் திருநாள் ...

முதல் நாள் தன்  வாழ்வு செழிக்க மண்ணில்
விளைந்த அரிசியில் பொங்கல் வைத்து
சுரியபகவானுக்கு படையலிட்டு
முதல் நன்றியை இறைவனுக்கு  தெரிவித்தான்  ...

இரண்டாம் நாள் தன் வாழ்வாதாரத்துக்கு
உதவிய கால்நடைகளுக்கு குளிப்பாட்டி
பொட்டிட்டு பூ சூட்டி பொங்கலிட்டு
உள்ளம் குளிர நன்றி தெரிவித்தான் ...

மூன்றாம் நாள் தன்னோடு தினம் உழைத்து
மேனி கருத்து களைத்து போன குடும்பத்துக்கு
புதுத்துணி எடுத்து கொடுத்து பெரியோரிடம்
ஆசிவாங்கி காணும் பொங்கலை கொண்டாடினான் ...

மனிதனின் அடிப்படை தேவையோடு வாழ்ந்த வரை
மனிதனின் மகிழ்ச்சி சாத்தியமே ஆனால் இன்று
கால நிலை மாற்றம் மனிதனின் வளர்ச்சி பேராசை
உழவனின் வாழ்வை  பொரட்டி போட்டது ...

தேவைக்கு வராத மழையால் காய்ந்த ஆறு
மணல் குவாரியாக மாறி போச்சி
மேய்ச்சலுக்கும் உழவுக்கும் இருந்த
கால்நடைகள் உணவு இன்றி கறிகளாச்சி ...

மனிதனுக்கு மனிதன் இழைத்த கொடுமையால்
உழவனுக்கு கண்ணீரும் கடனுமே சொந்தமாச்சி
மண்ணுக்கும் மனிதனுக்கும் தொடர்பு உண்டு உணர்ந்து
வாழ்ந்தால் தலைமுறை  தழைக்கும் அடுத்த பொங்கல் இனிக்கும் .....

மனிதா உணர்வாயா ....
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
தலை குனிந்த செங்கதிர்
தலை நிமிர்ந்து அறுவடைக்காய்
காத்திருக்கும் நேரம்

சேற்றோடு மிதிப்பட்ட பாதங்கள்
வான் பார்த்தே சிவந்த கண்கள்
தைபிறந்தால் வழிபிறக்குமென
வறுமையிலும் விட்டுத்தராது
கொண்டாட துடிக்கும்
தமிழ் பண்டிகை..
எம் தமிழருக்கான ஒரே பண்டிகை..

புத்தாடையும்  புதுப் பானையும்
மஞ்சளும்  செங்கரும்பும்
மாவிலை தோரணமும்
வண்ண வண்ணக் கோலங்கள்
வாசலை அலங்கரிக்க

வருடம் முழுதும்
உழைத்து களைத்த
காளைகள் அலங்காரமாய்
அணிவகுக்க

அங்கே இங்கே ஓடித்திரியும்
சிறுசுகள் பொங்கலுக்காக
காத்திருக்க

அழகாய் சூரியன் மேலெழ
புதுபனை பச்சரிசி
பாலோடு வெள்ளமும் கலந்தோட
பொங்கிவரும் பொங்கலைக் கண்டு
பொங்கலோ பொங்கலென
உற்சாக குரல் எழுப்பி தை மகளை
வரவேற்கும் தமிழர் திருநாள்
எங்கள் தமிழ் திருநாள்...

இளம் காளைகள்
முரட்டு க்காளைகளை
அடக்க துடிக்கும்
வீரத் திருநாள்...

மாறிவரும் கலாச்சாரம்
பண்டிகைகளை மறக்க  செய்த போதும்..
தொ(ல்)லை காட்சிப் பெ (பே)ட்டிகள்
தொல்லைதரும் போதும்
கிராமங்களில் மறியாமளிருக்கும்
தமிழர்த் திருநாள்...

மனதின் மாசை
பகைமை எண்ணத்தை
போகியோடு எரித்திடுவோம்..

பொங்கிவரும் நாளில்
தித்திக்கும் திங்களில்
திகட்டாத பொங்கலோடு
இனிமையோடு இணைந்து
தமிழன் என்ற தலைகனத்தோடு
கொண்டடி மகிழ்வோம்
இனிய பொங்கல் திருநாளை
பொங்கலோ பொங்கல்!!!!

என் இணைய நண்பர்கள் அனைவருக்கும் தமிழர்த் திருநாள் நல்  வாழ்த்துக்கள்


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

சுழன்றும் ஏர்பின்னது உலகம் ..
அன்று சொன்னான் அறிஞன்
முயன்றும் ஏர்  தவிர்ப்பது உலகம்
இன்றைய நிலைமை இது ..
சேற்றில் உழவன் கால் வைக்காது போனால்
சோற்றில் நாம் கைவைக்க முடியுமோ ..?
பிஸா .. பேர்கர் என
புது பொலிவுடன் புதிது புதிதாய் வந்தாலும்
ஒருபிடி சோற்றில் உன்
வயிறும் மனதும் நிறைவதுபோல்
நிறைதிடுமா அவை யாவும் ..

உழவர் திருநாளாம்
தைப் பொங்கல் திருநாள்
சூரியனுக்கு நன்றி சொல்லும்
உவப்பான ஒரு நாள் ..
உழவன் கதிரவனை வணங்கட்டுமே ..
உனக்கும் எனக்கும் உணவை வழங்க
உழுது பாடு படும்
உழவனை நாம் வணங்கலாமே ...

கோலமிட்டு  புது பானை வைத்து
பொங்கல் எல்லாம் பொங்கிடலாம் ..
புசித்தும் மகிழ்ந்திடலாம்
வற்றாத அன்னமிடும்
காமதேனுவாம் உழவனுக்கு
மனம் ஒப்பான வழி  செய்து
அவனை உவப்புடனே வாழவைப்போம் ..

என் உளம் கவர்ந்த நட்புகளே
பொங்கலிலே  இனிமைபோல
உங்கள் இல்லத்திலே இனிமை சூழ
என் உளம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள் ..
                    

Offline Dong லீ

கதிரவனுக்கு நன்றி சொல்லி
உழவர்கள் உள்ளம் மகிழும்
நன்னாளில்

உன்னத உழைப்பால்
உணவளிக்கும் உழவர்களுக்கான
திருநாளில்

உழவர்கள் அல்லாத நாம்
கதிரவனை வணங்கவும்
தேவை இல்லை 
மாடுகளை போற்றவும்
தேவை இல்லை

போற்ற வேண்டியது
உண்மையான நன்றியை
கதிரவனுக்கு சொல்லும்
உழவர்களை


ஆட்சியாளர்களுக்கு இணையான
உழவர்களை
ஏழைகளாய்
தாழ்ந்தவர்களாய்
பார்க்கும் அவலம்
களைந்து
வணங்குங்கள் உழவர்களை

உண்மையில் நம்
தலைவர்களும் உழவர்களே
நம் நாயகர்களும் அவர்களே

அண்டை நாடுகளை அடைந்து
மன்னர்கள் வளம்   பெறும்
காலத்திலேயே
உழவு செய்து
சொந்த உழைப்பில் வாழலாம்
என்று உணர்த்திய
தமிழ் உழவர்கள்
வரலாற்று நாயகர்கள்

அவர்களை வணங்குங்கள்
 
உழவர் தின  வாழ்த்துக்கள்

Offline MaZhAi

பட்டுப் புதுச்சோறு
பொங்கிவரும் பொங்கலிது

கரும்பைக் கைபிடிக்க
கட்டழகைக் கண்பிடிக்க
குறும்பைச் சொல்பிடிக்க
குமரியிதழ் தேன்வடிக்க

வயலில் வாய்க்காலில்
ஒய்யார நடைநடந்து
பயலும் பொண்ணுகளும்
பாடிவரும் பொங்கலிது

அன்னம் கொடுப்பவளின்

அருமைகளை எண்ணிமனம்
நன்றிப் பெருக்கோடு
நிலம்வணங்கும் பொங்கலிது

பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்
பொங்கலோ பொங்கல்

பொங்கல் கவிதை நிகழ்ச்சியில பங்கு பெற எனக்கு பிடித்த கவிதையை பகிறுகிறேன்

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
உழவனுக்கு ஓர் விழா

உழவன் கணக்கிட்டால்
குடிகூலியும் மிஞ்சாதென தெரிந்தும்
உலகத்தார் பசி தீர்திதிட
உதவும்  உழவனுக்கு
உழைக்கும் வர்கத்திற்க்கு
உழைத்து களைத்தவன்   
உள்ளம் களிக்க
உவகையுடன் கொண்டாடும்
ஓரே  விழா  பொங்கல் விழா......!!

சேற்று விளையாடி
நாற்றாங்கால் தயார் செய்து
ஆடியில் விதை விதைத்து
ஆவணியில்  ஆழ உழுது
வயல் வரப்பை செப்பனிட்டு
நாற்று நட்டு வைத்து
நேரா நேரத்திற்கு நீரிட்டு 
ஐப்பசியில் களைபரித்து
நன்கு விளைந்த நெல்லை 
மாதங்களின்  இறுதியாம்
மார்கழியில் அறுவடை முடித்து 
விளைச்சலுக்கு உதவிய
இயற்கைக்கும், கால்நடைக்கும்
போட்டதை பொன்னாக்கும் பூமி தாயிற்க்கும்,
செங்கதிரோன் சூரியனுக்கும்
நன்றி  நவிலும் விதமாக
தை முதல்  தேதியாம்
மங்கள நன்னாளில்
கதிரவன் முன்னிலையில்
மஞ்சள் கட்டிய புதுப்பானையில்
புத்தரிசியிட்டு, சிதைமூட்டி
பச்சரிசியை பக்குவமாய் வேகவைத்து
பாலோடு, ஏலக்காய், வெல்லம், முந்திரி,
நெய் சேர்த்து பொங்கிவரும்போது
பொங்கலோ பொங்கலென
ஆனந்தமாய் களிகூத்தாடி
கரும்பு முதலான விளை பொருட்களை
கதிரவனுக்கு படையலிட்டு  மகிழ்வர்....!!

தமிழுள்ளம்  கொண்ட உறவுகளே
நுனிகரும்பின் உவர்ப்பை போல் உழைப்பும்
அடிகரும்பின் இனிப்பைபோல்
உழைப்பின் பலனும் பெற்று
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்திட
இதயங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்......!!
« Last Edit: January 13, 2013, 07:23:57 PM by suthar »

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்