Author Topic: கார தோசை  (Read 830 times)

Offline kanmani

கார தோசை
« on: January 08, 2013, 10:00:46 PM »
பொதுவாக தோசை என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் வேலைக்கு செல்பவர்களுக்கு என்றால் சொல்லவே வேண்டாம். ஏனெனில் இதனை செய்து சாப்பிடுவது என்பது மிகவும் எளிதானது அல்லவா? இத்தகைய தோசையில் பல வகைகள் உள்ளன. இப்போது அதில் ஒரு வகையான கார தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

புழுங்கலரிசி - 3 கப்
துவரம் பருப்பு - 1 கப்
வர மிளகாய் - 10
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
 பூண்டு - 10 பல்
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத் தூள் - சிறிது
கொத்தமல்லி - சிறிது
 எண்ணெய் - தேவையான அளவு

 செய்முறை:

முதலில் அரிசி மற்றும் துவரம் பருப்பை நீரில் 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

 பின்னர் அதனை கிரைண்டரில் போட்டு, அத்துடன் வரமிளகாய், புளி, பூண்டு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு நைஸாக, தோசை மாவு போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதில் உப்பு மற்றும் கொத்தமல்லி சேர்த்து கிளறி, சுமார் நான்கு மணிநேரம் புளிக்க விட வேண்டும்.

பின்பு ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல்லானது சூடானதும் அதில் தோசை போன்று விட்டு, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும்.

 இப்போது சுவையான கார தோசை ரெடி!!!

 இதனை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.