Author Topic: பச்சை மொச்சை சாம்பார்  (Read 898 times)

Offline kanmani

பச்சை மொச்சை சாம்பார்
« on: January 07, 2013, 10:47:12 PM »
பச்சை மொச்சை கிராமப் பகுதிகளில் மிகவும் சிறப்பானது. அதனை சமைத்து சாப்பிட்டால், அதன் சுவைக்கு ஈடு இணை எதுவும் இல்லை. அதுமட்டுமின்றி, இது பச்சையாக இருப்பதால், அதனை சமைத்து சாப்பிடும் போது அதில் உள்ள முழு சத்துக்களையும் அப்படியே பெறலாம். இப்போது அந்த பச்சை மொச்சையை வைத்து எப்படி சாம்பார் செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

பச்சை மொச்சை - 2 கப்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
கத்திரிக்காய் - 1 (நறுக்கியது)
பூண்டு - 5 பல்
தக்காளி - 1 (நறுக்கியது)
புளி சாறு - 1 டேபிள் ஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
வெல்லம் - 1 சிறுதுண்டு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 2 கப்

செய்முறை:

முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் மொச்சையை கழுவி போட்டு, போதுமான தண்ணீர் ஊற்றி, 2 விசில் விட்டு இறக்கி, தண்ணீரை வடித்து குளிர வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து, தீயை குறைவில் வைத்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். பிறகு அதில் நறுக்கிய தக்காளி மற்றும் கத்தரிக்காய் சேர்த்து, 3 நிமிடம் வதக்க வேண்டும்.

பின்பு உப்பு, மல்லி தூள், மிளகாய் தூள், புளி சாறு மற்றும் வெல்லம் சேர்த்து, 2 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்க விட வேண்டும்.

சாம்பாரானது நன்கு கொதித்ததும், அதில் வேக வைத்துள்ள மொச்சையை போட்டு, 4-5 நிமிடம் தீயை குறைவில் வைத்து, கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

இப்போது சுவையான மொச்சை சாம்பார் ரெடி!!! இதனை சாதத்துடன் தொட்டு சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.