மசாலா வேர்க்கடலை ஒரு பொதுவான ஸ்நாக்ஸ். இதனை வீட்டில் மாலை வேளையில் டிவி பார்க்கும் போது, டீ அல்லது காப்பி குடிக்கும் போது, இந்த ஸ்நாக்ஸையும் செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். பொதுவாக இதனை கடைகளில் பாக்கெட் போட்டு விற்பதைத் தான் வாங்கி சாப்பிடுவோம். ஆனால் இதனை வீட்டிலேயே ஈஸியாக செய்து சாப்பிடலாம். இந்த மசாலா வேர்க்கடலையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
பச்சை வேர்க்கடலை - 1 கப்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/4 டீஸ்பூன்
சாட் மசாலா - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலையை போட்டு வறுக்க வேண்டும்.
பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை போட்டு தாளித்து, பின்னர் வறுத்து வைத்துள்ள வேர்க்கடலை, மிளகாய் தூள், கரம் மசாலா தூள், சாட் மசாலா மற்றும் உப்பு சேர்த்து கிளற வேண்டும்.
வேர்க்கடலையானது நன்கு மொறுமொறுவென்று ஆனதும், அதனை இறக்கிவிட வேண்டும்.
இப்போது சூப்பரான மசாலா வேர்க்கடலை ரெடி!!!