உயிரே! உன்னை விட்டு
பிரிந்து வந்து விட்ட நான்..
உன் நினைவுகளை விட்டு
பிரிய முடியாமல் தவிக்கிறேன்!
உன் கண்ணை பார்த்து..
உன் மனதை படிக்க தெரிந்த
நான் - இன்று உன் கண்ணில்
கண்ணீர் வர வைத்து விட்டேன்!
உனக்கு தெரியுமா! உன்னை
மறக்க நினைத்து நினைத்து
என்னை மறந்து போனேன் என்பதை!
உடல் மட்டும்
உன்னை பிரிந்து வாழ
என் உயிரோ உன்னோடு வாழ
இன்னும் துடிக்கிறதே?
நான் என்ன செய்வேன்..?