Author Topic: காளான் ஆம்லெட்  (Read 703 times)

Offline kanmani

காளான் ஆம்லெட்
« on: January 02, 2013, 10:22:09 AM »
முட்டை உடலுக்கு எவ்வளவு நல்லதோ, அதேப்போல் காளானும் மிகவும் சிறந்தது. அதிலும் இந்த முட்டையில் செய்யப்படும் ஆம்லெட்டில் நிறைய வகைகள் உள்ளன. அந்த வகைகளில் காளானை வைத்தும் ஆம்லெட் செய்யலாம். இந்த ரெசிபியானது செய்துவது மிகவும் எளிது. மேலும் இது குழந்தைகளுக்கு ஏற்ற ஒரு சிறந்த காலை உணவாக கூட இருக்கும். இப்போது அந்த காளான் ஆம்லெட் எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

முட்டை - 3 பட்டன்
காளான் - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
சாட் மசாலா - 1 சிட்டிகை
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

அதே சமயம் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெயை போட்டு உருகியதும், காளான் மற்றும் வெங்காயத்தை போட்டு, 2 நிமிடம் வதக்கி, உப்பு சிறிது தூவி, மறுபடியும் நன்க கிளறி விட வேண்டும்.

 பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் முட்டை கலவையை தோசைப் போல் ஊற்றி, இருபுறமும் வேக வைத்து, பிறகு அதனை ஒரு தட்டில் வைத்து, அதன் மேல் அந்த காளானை பரப்பி, சாட் மசாலாவை தூவி, மடக்க வேண்டும்.

இப்போது சூப்பரான காளான் ஆம்லெட் ரெடி!!!