Author Topic: எது கவர்ச்சி…?  (Read 1665 times)

Offline Global Angel

எது கவர்ச்சி…?
« on: January 02, 2013, 03:18:27 AM »
கவர்ச்சி இல்லாமல் காமம் இல்லை.. காமம் இல்லாத கவர்ச்சிக்கு மரியாதையே இல்லை…ஆனால் எது கவர்ச்சி என்பதை கோடிட்டு இப்படித்தான் இருக்கும் என்று விளக்கத்தான் முடியாது. காரணம் ஒவ்வொருவரின் பார்வைக்கும் ஒரு இலக்கணம் இருக்கும், கோணம் இருக்கும்.

சில ஆண்களுக்கு பெண்களின் கேசத்தைப் பார்த்தாலே கிளர்ச்சி ஏற்படுமாம். உனது தலைமுடி எவ்ளோ கவர்ச்சியா இருக்கு தெரியுமா, அதுவும் அப்படியே லூஸாக விரித்து விட்டு சின்னதாக ஒரு பின்னல் மட்டும் வைத்து விட்டு வந்தால் அப்படியே சொக்கிப் போகும் என்று சொல்லி சிலிர்ப்பவர்கள் இருக்கிறார்கள்.

சிலருக்கு பெண்களின் கன்னத்தைப் பார்த்தால் கிளர்ச்சி வருமாம். கன்னம் அவர்களுக்கு கவர்ச்சிகரமான ஒரு ஏரியாவாகத் தெரியுமாம். உன் கன்னத்தைப் பார்த்தால் கள் வெறி கொள்ளுமடி என் மனம் என்று பாடவும் தொடங்கி விடுவார்கள்.

இன்னும் சில ஆண்களுக்கு பெண்களின் உதடுகள் கவர்ச்சிகரமாகத் தோன்றும். பெரும்பாலானவர்களுக்கு பெண்களின் உதடுகள் என்றால் மனம் படபடத்துத்தான் போகும் என்றாலும், சிலருக்கு உதடுகள் என்றாலே உள்ளூர குளிர்ந்து போய் விடுமாம். அப்படியே தின்னுடனும் போல இருக்குடா என்று மருகிப் போய் விடுவார்களாம் இவர்கள்.

சிலருக்கு பெண்களின் மூக்கு மேல் தீராத மோகம் இருக்குமாம். இதற்கு சைக்கலாஜிக்கலாக சில காரணங்களும் உள்ளன. அந்த விளக்கம் பெரிது என்பதால் அதை மட்டும் விட்டு விடலாம். பெரும்பாலான ஆண்களுக்குப் பெண்களின் மூக்கு பெரும் கிளர்ச்சி தருவதாக சொல்கிறது ஆய்வுகளும்.

பல ஆண்களுக்கு பெண்களின் மார்புகள் கவர்ச்சிகரமாக தோன்றும். மார்புகள் மீது மாய்ந்து மாய்ந்து பார்வையை ஓட விடுவார்கள். மார்புகளுக்கு நடுவே என்னை புதைத்துக் கொள்ளட்டா என்று கண்களால் கிறக்கமாக கேட்கும் ஆண்கள்தான் அதிகம்.

பிறகு வழக்கம் போல இடுப்பு, தொப்புள் என ஆண்களைக் கவரும் வேறு சில இடங்களும் உள்ளன.

பலருக்கு பெண்களின் அழகான புன்னகை கவர்ச்சிகரமாக இருப்பதாக கருதுகிறார்கள். உன் புன்னகை என் மனதைக் குத்திக் கிழித்துக் கூறு போடுகிறதடி பெண்ணே என்று பாடுவோர் பலர் உண்டு.

ஆனாலும் பல ஆண்கள் கூறுவது என்ன தெரியுமா… கண்களை விட கவர்ச்சிகரமான காமன் கணை எதுவுமே இல்லை என்பதுதான். உன்னுடைய கண் ஒன்று போதும் கண்ணே, என்னைக் கொல்ல என்று கவிஞராக மாறாத குறையாக பலரும் பாடிக் கொண்டிருக்கிறார்களாம்.

 ஆய்வுகளிலும் கூட பெண்களின் கண்களை பல ஆண்களால் நேருக்கு நேர் சந்திக்க முடிவதில்லை என்று சொல்லப்பட்டுள்ளது. காரணம், ஆண்களைப் போல இல்லாமல், பெண்கள் ஒரு ஆணைப் பார்க்கும்போது ஸ்கேனிங் செய்வது போல ஊடுறுவிப் பார்ப்பார்களாம். இவன் நல்லவனா, இவனை நம்பலாமா என்று தொடங்கி ஏகப்பட்ட சர்வேக்களை அந்த இரு கண்களும் சட்டுப்புட்டென்று நடத்தி முடித்து விடுமாம். இதனால்தான் பெண்களின் கண்களை சந்திக்க பல ஆண்களும் தடுமாறக் காரணமாம்.

உண்மையும் கூட… சக்தி வாய்ந்த பெண்களின் கண்களைப் பார்த்தால் யாருக்குமே கிலி வரத்தானே செய்யும்!