Author Topic: ஆடியோ பைல் வகைகள்  (Read 1427 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 598
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
ஆடியோ பைல் வகைகள்
« on: January 02, 2013, 02:57:06 AM »


சையை ரசிப்பதிலும் அவற்றைப் பங்கிட்டுக் கொள்வதிலும் மற்றவர்களுக்கு அனுப்புவதிலும் இன்று பலவகையான ஆடியோ பைல்கள் நமக்கு உதவுகின்றன. எடுத்துக்காட்டாக எம்பி3 பைல்கள் இந்த வகையில் பெரிய புரட்சியை ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது.கம்ப்யூட்டர் பயன்பாட்டில் உள்ள சில ஆடி@யா பைல் வகைகளை இங்கு காணலாம்.
.mp3: MPEG3 என்பதன் சுருக்கமாகும். சுருக்கமான முறையில் சிறிய பைல்களாக இசையைப் பதிவு செய்து அனுப்ப இணக்கமான பைல் பார்மட் இதுவாகும். இதனை ஒலிக்கச் செய்திட பல இலவச புரோகிராம்கள் இணையத்தில் கிடைக்கின்றன. வெகுகாலமாக மிக எளிதானதாகவும் பல வசதிகள் கொண்டதாகவும் கருதப்படுவது விண் ஆம்ப் பிளேயராகும். விண்டோஸ் மீடியா பிளேயரும் இதனை இயக்கும்.
.wav: எம்பி 3 போல இதுவும் பிரபலமான ஒரு ஆடியோ பைலாகும். டிஜிட்டல் ஆடியோவைப் பதிவதில் இதுவும் ஒரு எளிய சிறிய பைலாக உருவாகும். எம்பி3 இயக்கும் ஆடியோ பிளேயர்கள், குறிப்பாக விண்டோஸ் மீடியா பிளேயர், இதனையும் இயக்குகின்றன.
.aif: Audio interchange File format என்பதன் சுருக்கம் இது.வர்த்தக ரீதியாக வெளியிடப்படும் ஆடியோ சிடிக்களில் இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மிகச் சிறந்த முறையில் ஆடியோவை வெளிப்படுத்தலாம். துல்லிதமான இசையைத் தருவதால் இதன் பைல் அளவு பெரிதாக இருக்கும். மூன்று நிமிடம் பாடக் கூடிய பாடல் 30 முதல் 50 எம்பி வரை இடம் பிடிக்கும். விண்டோஸ் மீடியா பிளேயரைப் பயன்படுத்தி இதனை இயக்கலாம்.
.ogg: இதனை அடிக்கடி நீங்கள் காண முடியாவிட்டாலும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பைல் வகையாகும். இதனை Ogg Vorbis audio என்று கூறுவார்கள். இது எம்பி3 பைலைக் காட்டிலும் இசையைத் தெளிவாகவும் துல்லிதமாகவும். இதனையும் விண்டோஸ் மீடியா பிளேயரில் இயக்கிக் கேட்கலாம். ஆனால் அதற்கு கோடெக் (codec)என்னும் ஸ்பெஷல் பைல் வேண்டும். இதனை www.freecodecs என்ற தளத்திலிருந்து இறக்கிக் கொள்ளலாம்.
.wma: விண்டோஸ் மீடியா ஆடியோ பைல் என்பதன் சுருக்கம். இந்த பைல் வகையை உருவாக்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம். இந்த வகை பைல்களும் அளவில் மிகச் சிறியதாக இருக்கும். விண்டோஸ் மீடியா பிளேயரில் இதனை இயக்கி ரசிக்கலாம்.