Author Topic: வீட்டு வாசலுக்கு எதிரே சுவர் இருந்தால் பாதிப்பு ஏற்படுமா?  (Read 1683 times)

Offline Global Angel


வீட்டு வாசல்படிக்கு எதிரே சுவர் மறைப்பது போல் இருப்பதால் பாதிப்பு ஏற்படும் என்று பொதுப்படையாகக் கூறிவிட முடியாது. சம்பந்தப்பட்ட வீடு தரைதளத்தில் உள்ளதா, முதல் தளத்தில் உள்ளதா என்று பார்க்க வேண்டும்.

முதல் தளம், 2வது தளத்தில் அமைந்துள்ள வீடுகளின் வாசல்படிக்கு எதிரே சுவர் இருப்பது பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் தரைத்தளத்தில் உள்ள வீடுகளில் வாசலுக்கு நேர் எதிரே சுவர் இருப்பது காற்று, ஒளி இவற்றைத் தடுக்கும். இதனால் அது உடல்நலக் குறைவுகளை ஏற்படுத்தும்.

நமக்குச் சொந்தமான சுவராக இருந்தால் அதில் ஓட்டைகளை ஏற்படுத்தலாம். ஒருவேளை நாம் வீடு கட்டிய பின்னர் அண்டை வீட்டுக்காரர் பெரிய சுவர் எழுப்பி (நம் வீட்டு வாசல் முன்) வீடு கட்ட முனைந்தால், பக்குவமாக எடுத்துக் கூறி மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ளச் சொல்லலாம்.

இதுபோன்ற அமைப்பு உடைய வீடுகளில் வாயிலுக்கு அருகே அலங்கார செடிகளை படர விடலாம். இதன் மூலம் காற்று சுத்தமடைவதுடன், வீட்டின் குறைபாடும் நீங்கும்.