Author Topic: தெற்கு திசையில் மூட முடியாத நிலையில் கிணறு இருந்தால் என்ன செய்யலாம்?  (Read 1783 times)

Offline Global Angel


தெற்கு திசையில் கிணறு இருப்பது செல்வத்திற்கும், பெண்களுக்கும் கேடு விளைவிக்கும் என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்களுக்கு கருப்பை நீக்கம், உடல்நலக் குறைவு ஆகியவை ஏற்படும்.

எனவே தெற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு திசைகளில் கிணறு இருந்தால், அந்த வீட்டில் பெண்கள் பூரண ஆரோக்கியத்துடன் இருக்க முடியாது. சில சமயம் இதனால் துர்மரணங்களும் ஏற்படும். அதனால், தெற்கு பகுதியில் உள்ள கிணற்றை எப்படியாவது மூடிவிடுவது நல்லது.

ஒரு சிலருக்கு கிணற்றை மூட முடியாத நிலை ஏற்படலாம். உதாரணமாக நீதிமன்றத்தில் கிணறு யாருக்கு சொந்தம் என வழக்கு நடக்கும் அல்லது பங்காளித் தகராறு காரணமாகவும் கிணற்றை மூட முடியாது.

அதுபோன்ற நேரத்தில் கிணறு உள்ள பகுதியை பயன்படுத்தாமல், சுவர் எழுப்பி மறைத்து விட்டு, மனையின் ஈசானிய மூலையில் புதிதாக அழ்துழாய் கிணறு அல்லது கிணறு அமைத்துக் கொள்வது ஓரளவு பலனைத் தரும்.