Author Topic: ‘வாஸ்து புருஷன்’ என்ற சொல்லின் அர்த்தம் என்ன? அது எதற்கு பயன்படுகிறது?  (Read 2221 times)

Offline Global Angel


‘வாஸ்து புருஷன்’ என்பவர் குறிப்பிட்ட மாதங்களில் குறிப்பிட்ட திசையில் சிரசு வைத்திருப்பார், கால் வைத்திருப்பார் என்று வாஸ்துவில் கூறப்பட்டுள்ளது. பூமியின் சுழற்சியை மையமாக வைத்தே வாஸ்து புருஷன் கணிக்கப்படுகிறது.

சூரியன் உதிக்கும் திசை, மறையும் திசை, உத்ராயணம், தட்ஷிணாயனம் ஆகியவையும் வாஸ்து புருஷன் குறித்த கணிப்பில் பெரும்பங்கு வகிக்கின்றன. ஒவ்வொரு கிரகங்களுக்கும் பாவனை இயக்கம் என்ற கணிப்பு மேற்கொள்ளப்படும். ஜாதகம் எழுதும் போது கூட சிலர் இராசி, நவாம்சம் ஆகியவற்றுடன் பாவனை இயக்கத்தையும் கணித்துக் கூறுவர்.

வாஸ்துவில் ‘வாஸ்து புருஷன்’ என்பது கூற பாவனை இயக்கத்தைப் போன்றதே. இயற்கையை ஒன்றி வாஸ்து புருஷன் கணிக்கப்பட்டுள்ளதால், அதை வைத்து வீடு கட்டும் போது சில செயல்களைச் செய்தால் சிறப்பாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

வாஸ்து புருஷனைப் பின்பற்றி குறிப்பிட்ட செயல்களை மேற்கொள்ளும் போது இயற்கையின் ஒத்துழைப்புடன் வீட்டை கட்டி முடிக்க முடியும். இடையூறுகள் ஏற்படாது.