Author Topic: இருதய நோயாளிகள் ஆரோக்கிய உணவை மறக்கக்கூடாது!  (Read 806 times)

Offline Global Angel

இருதய நோயாளிகள் தாங்கள் ரெகுலராக மருந்துகளை எடுத்துக் கொள்வதால் சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் ஆகியவை ஏற்படாது என்று கருதி உணவுப்பழக்க வழக்கங்களில் எச்சரிக்கையற்ற போக்குகளைக் கடைபிடிப்பதால் மரண எண்ணிக்கை அதிகரிக்கிறது என்று அமெரிக்க மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

என்னதான் ஆஸ்பிரின், பீட்டா பிளாக்கர்கள், கால்சியம் சானல் பிளாக்கர்கள் வகை மருந்துகளை எடுத்துக் கொண்டாலும் உணவு எடுத்துக் கொள்வதில் எச்சரிக்கையை விட்டு விடுவது நல்லதல்ல என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

சிலர் மாத்திரை எடுத்து கொள்கிறோம் என்று மீண்டும் மது அருந்துவது, புகைபிடிப்பது போன்ற பழக்கவழக்கங்களிலும் இறங்குகின்றனர். இது மிகவும் ஆபத்தான போக்காகும்.

இறைச்சி உணவை விட மீன், பால், பழங்கள், காய்கறிகள் என்ற உணவு வகையை அதிகம் எடுத்துக் கொள்வது நலம் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

உணவு பழக்கவழக்கத்தில் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளும் இருதய நோயாளிகள் பலர் மரண வாய்ப்பையும் கூட தள்ளிவைத்துள்ளனர் என்று இந்த மருத்துவர்களின் ஆய்வு மூலம் முடிவுக்கு வரப்பட்டுள்ளது.

காய்கறிகள், மீன், பழங்கள் ஆகியவற்றை உணவில் அதிகரிக்கவேண்டும். இறைச்சி உணவுகளை குறைக்கவேண்டும்.

எனவே மருத்துவர்கள் இத்தகைய அறிவுரையை தங்கள் இருதய நோயாளிகளுக்கு வழங்கவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இவர்களது ஆய்வு முடிவுகள் அமெரிக்க இருதய நோய் கூட்டமைப்பின் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.