தனிமையின் வெறுமையை
இன்று உணர்கிறேன்...காதலே
நீ என் அருகில் இல்லாத நாட்களில்
,
காலம் களவாடிச் சென்று விட்டதா?
உன் வயதுடன் என்
நினைவுகளையும் சேர்த்து
உறங்கும்போது உன் நினைவலைகள்
கனவின் காட்சிகளாக...
விழிக்கும்போது உன் நிழற்படங்கள்
நனவின் சாட்சிகளாக...
உயிரோடு கலந்த உணர்வென
என் மூச்சில் நீயும் கலந்திட்டாய்...
உன் பிரிவால் வரும்
துயரின் கண்ணீரை விரைவில்
நீயும் துடைத்திடுவாய் என
விழியோரங்களில்
கண்ணீரை ஏந்தும்
வலியுடன் உன் .........