Author Topic: ~ மிக்ஸ்டு வெஜிடபிள் சூப் ~  (Read 711 times)

Offline MysteRy

மிக்ஸ்டு வெஜிடபிள் சூப்



கேரட், கோஸ், பீன்ஸ், காலிஃபிளவர்,
உருளைக்கிழங்கு என எல்லாம் சேர்த்து 2 கப்
(நறுக்கிக் கொள்ளவும்),
எலுமிச்சைச்சாறு  1 டீஸ்பூன்
அல்லது சோயா சாஸ் மற்றும் சில்லி சாஸ்,
வினிகர்  தலா 1 டீஸ்பூன்,
உப்பு, மிளகுத்தூள்  தேவைக்கேற்ப.


காய்கறிகளை 4 கப் தண்ணீர் விட்டு, 20 நிமிடங்களுக்கு, குறைந்த தீயில் கொதிக்க விடவும். நீண்ட நேரம் கொதிப்பதால், காய்கறிகளின் சத்துகள் அனைத்தும் தண்ணீரில் இறங்கி விடும். பிறகு அதை வடிகட்டி, தண்ணீரைத் தனியே எடுத்து, அதில் உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சை சாறு சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

அல்லது வடிகட்டின காய்கறித் தண்ணீரில் சோயா சாஸ், சில்லி சாஸ், வினிகர் சேர்த்து 1 கொதி வந்ததும் கீழே இறக்கி சூடாகப்  பரிமாறவும். சளிபிடிக்காமலிருக்க வெஜிடபிள் சூப் சாப்பிடலாம்